தற்போதைய அரசாங்கத்தில் உறவுமுறை ஆதரவு அரசியலுக்கு இடமில்லை: நாமல்
தற்போதைய அரசாங்கத்தில் உறவுமுறை ஆதரவு அரசியலுக்கு NEPOTISM) இடமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
"நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உங்களின் உறவினராக இருக்கின்ற போதும் நாட்டின் பிரச்சினைகளை நேரடியாக தீர்க்காமல் ஏன் ட்விட்டர் அறிக்கைகள் மூலம் உரையாற்றுகிறீர்" என குறித்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஊடகவியலாளரொருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்கக்ஷ, "ஜனாதிபதி தனது மாமாவாகவும், பிரதமர் தனது தந்தையாகவும் இருந்தபோதிலும், தற்போதைய அரசாங்கத்தில் உறவுமுறை ஆதரவு அரசியலுக்கு (NEPOTISM)) இடமில்லை" என்றார்.
மேலும், நாட்டில் எழுப்பப்பட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான நேரடி கலந்துரையாடல்/கூட்டங்களிலே உரையாற்றுகிறேன். ஆனால் கூட்டங்களுக்கு வெளியே விடயங்களைப் பற்றி நான் விவாதிப்பதில்லை என அவர் கூறினார்.
"வீட்டுக்கும் பாராளுமன்றத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இதுபோன்ற விடயங்களை வீட்டில் விவாதிக்க எனக்கு உரிமை இல்லை. அதுதான் எனது நிலைப்பாடு" எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அந்த நேர்காணலில் பதிலளித்தார்.
Comments (0)
Facebook Comments (0)