உலக வங்கியின் இலங்கை பணிப்பாளர் - மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு
மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹாடாட் சேர்வோஸிற்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தேசமான்ய பேராசிரியர் டபிள்யு.டி லக்ஸ்மன் ஆகியோரிடையேயான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளர் சியோ கண்டாவும் கலந்துகொண்ட இந்த சந்திப்பில் பல்வேறுபட்ட விடயங்களில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
தோற்றம்பெற்று வருகின்ற மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற பொருளாதாரங்கள் அவர்களின் உற்பத்தி மற்றும் புத்தாக்க இயலளவினை உறுதிப்படுத்துவதற்கு இயலச்செய்து, அதனூடாக அத்தகைய நாடுகளின் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கு பல்புடை நிதியியல் நிறுவனங்களினால் வழங்கப்படும் ஆதரவுகளினை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியத்தினை ஆளுநர் லக்ஸ்மன் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
Comments (0)
Facebook Comments (0)