சவூதி, கட்டாருக்கான புதிய தூதுவர்கள் நியமனம்
சவூதி அரேபியா மற்றும் கட்டார் உள்ளிட்ட ஒன்பது நாடுகளுக்கான புதிய தூதுவர்களை இலங்கை அரசாங்கம் நியமனம் செய்துள்ளது.
இதில் பெரும்பாலனாவர்கள் இலங்கை வெளிநாட்டு சேவையினை சேர்ந்தவர்களாவார். இவர்களுக்கான நேர்மூகப் பரீட்சையினை பாராளுமன்றத்தின் உயர் பதவிகளுக்கான குழுவினால் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதற்கமைய சவூதி அரேபியாவிற்கான தூதுவராக அஹமட் ஏ. ஜவாத் சிபாரிசு செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு சேவையின் மூத்த அதிகாரியான இவர், தற்போது வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றுகின்றார்.
கனடாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராகவும், நோர்வே மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கான தூதுவராகவும் இவர் முன்னர் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கட்டாருக்கான இலங்கை தூதுவராக மபாஸ் மொஹைதீன் நியமிக்கப்படவுள்ளார்.
புதிய தூதுவர்களின் விபரம்:
1. ஏ.எம்.ஜே. சாதீக் - நைஜீரியாவிற்கான இலங்கை தூதுவர்
2. அஹமட் ஏ. ஜவாத் - சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதுவர்
3. அருணி ரணராஜா - நெதர்லாந்திற்கான இலங்கை தூதுவர்
4. தர்ஷன பெரேரா - சுவீடன் இராச்சியத்திற்கான இலங்கை தூதுவர்
5. எம்.கே. பத்மநாதன் - எகிப்திற்கான இலங்கை தூதுவர்
6. எல்.ஏ.கே. சேமசிங்க - பேலாந்திற்கான இலங்கை தூதுவர்
7. சமிந்தா ஏ. கேலன்னே - தாய்லாந்திற்கான இலங்கை தூதுவர்
8. ஏயார் மார்ஷல் சுமங்கல டயஸ் - கனடாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர்
9. எம். மபாஸ் மொஹீதின் - கட்டாருக்கான இலங்கை தூதுவர்
Comments (0)
Facebook Comments (0)