பொதுமக்களிடமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வைப்பு செய்வதற்கான பொதுமன்னிப்பு
பொதுமக்கள் வசமுள்ள வெளிநாட்டு நாணயத்தை வங்கித் தொழில் முறைமையினுள் கவர்ந்துகொள்ளும் பொருட்டு, வெளிநாட்டு நாணயத் தாள்களை உடமையில் வைத்திருக்கின்ற இலங்கையிலுள்ள அல்லது வதிகின்ற ஆட்களுக்காக பின்வருவனவற்றுக்காக நிதி அமைச்சர் 2022.08.15 அன்று தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் 1 மாத பொதுமன்னிப்புக் காலத்தினை வழங்கும் கட்டளையொன்றினை வழங்கியுள்ளார்:
i. கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறு தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்கில் அல்லது வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கில் ஏற்புடையவாறு வைப்பிலிடுதல் அல்லது
ii. அதிகாரமளிக்கப்பட்ட வணிகருக்கு (உரிமம்பெற்ற வர்த்தக வங்கி அல்லது தேசிய சேமிப்பு வங்கி) விற்பனை செய்தல்
மேற்குறித்தவை பற்றிய மேலதிகத் தகவல்களை கீழுள்ள வழிமுறைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்:
அ. ஏதேனும் உரிமம்பெற்ற வர்த்தக வங்கியினை அல்லது தேசிய சேமிப்பு வங்கியினைத் தொடர்புகொள்ளுதல்.
ஆ. www.dfe.lk என்ற வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக 2293/07 ஆம் இலக்க 2022.08.15ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை (அதிவிசேடமானது) அறிவித்தலில் வெளியிடப்பட்ட வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 08ஆம் பிரிவின் கீழான கட்டளையினைப் பார்வையிடுதல்.
இ. 011-2477255, 011-2398511 மற்றும் dfe@cbsl.lk ஊடாக வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்தினைத் தொடர்புகொள்ளுதல்
Comments (0)
Facebook Comments (0)