பாகிஸ்தானிலிருந்து அதிக சுற்றுல்லா பயணிகளை அழைத்து வர நடவடிக்கை
இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சுற்றுல்லா துறையினை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுக்கு பின்னரான நிலையில், பாகிஸ்தானிலிருந்து அதிக சுற்றுல்லா பயணிகளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இதன் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் என்.எம்.சஹீட் மற்றும் இலங்கை சுற்றுல்லா மேம்படுத்தல் பணியகத்தின் தலைவர் கிஷு கோம்ஸ் ஆகியோரிடையேயான முக்கிய சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
இதில் சுற்றுல்லா மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் பணிப்பிளர் ஏ.எம்.ஜௌபரும் கலந்துகொண்டார்.
Comments (0)
Facebook Comments (0)