கொவிட்-19 மூன்றாம் அலை: வியாபாரங்களுக்கான சலுகைத் திட்டம்
கொவிட்-19 உலகளாவிய நோய்த் தொற்றின் மூன்றாம் அலை காரணமாக உரிமம் பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களுக்கு பின்வருமாறு சலுகைகளை வழங்குமாறு உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் கோரியுள்ளது:
செயற்படுகடன் வசதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள்:
அதற்கமைய, 2021 மே 15 அன்று உள்ளவாறு செயலாற்றுகின்ற வகையினுள் காணப்படுகின்ற கொடுகடன் வசதிகள் தொடர்பில், தகைமையுடைய கடன்பெறுநர்களில் நிதிசார்ந்த இன்னல்களைக் கருத்திற்கொண்டு (தொழில் இழப்பு, வருமானம அல்லது சம்பள அல்லது விற்பனைகள் இழப்பு அல்லது குறைவு, வியாபாரத்தினை மூடுதல் போன்ற) 2021 ஓகஸ்ட் 31 வரையான காலப்பகுதின்போது விடயத்திற்கு விடயம் என்ற அடிப்படையில் மூலதனம், வட்டி அல்லது இரண்டினதும் அறவீட்டினைப் பிற்போடுதல்.
1. ரூபாய்க் கடன் வசதிகள் விடயத்தில், 2021 மே 19ஆம் திகதியில் உள்ளவாறான 364 நாள் திறைசேரி உண்டியலின் ஏல வீதத்துடன் (அதாவது ஆண்ற்டிகு 5.18 சதவீதம்) ஆண்டிற்கு 1 சதவீதத்தினைக் கூட்டிய வீதத்தினை (அதாவது ஆண்டிற்கு 6.18 சதவீதம்) விஞ்சாத வட்டி வீதத்தினை உரிமம் பெற்ற வங்கிகள் அறவிடலாம்.
2. வெளிநாட்டு நாணயக் கடன்கள் விடயத்தில், நிலவுகின்ற குறைவான வட்டி வீதங்களைக் கருத்திற்கொண்டு சலுகை வட்டி வீதமொன்றினை உரிமம்பெற்ற வங்கிகள் அறவிடலாம்.
மாற்றுவழியாக, உரிமம்பெற்ற வங்கிகள், கடன் பெறுநரின் மீள்கொடுப்பனவு இயலளவினையும் அத்தகைய கடன்பெறுநர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற்கொண்டு ஏற்கனவே காணப்படுகின்ற கொடுகடன் வசதிகளை நீண்ட காலப் பகுதியொன்றுக்காக மறுசீரமைக்கலாம்
செயற்படா கடன் வசதிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சலுகைகள்:
கடன்பெறுநரின் மீகொடுப்பனவு இயலளவினையும் ஏற்றுக்கொள்ளத்தக்க மீளெழுச்சித் திட்டத்தினையும் கருத்திற்கொண்டு 2021 மே 15 அன்று உள்ளவாறு செயற்படா வகையிலுள்ள கொடுகடன் வசதிகளை, உரிமம்பெற்ற வங்கிகள் மீள் அட்டவணைப்படுத்தலாம். 2020 ஏப்ரல் 01ஆம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் செயற்பாடற்றவையாக வகைப்படுத்தப்பட்டுள்ள கொடுகடன் வசதிகளுக்கெதிரான அனைத்து அறவீட்டு நடவடிக்கைகளும் 2021 ஓகஸ்ட் 31 வரை இடைநிறுத்தப்படுவதற்கு வேண்டப்பட்டுள்ளன.
ஏனைய சலுகைகள்
1. ரூ.500,000 இற்குக் குறைவான பெறுமதியுடைய காசோலைகளின் செல்லுபடியாகும்
காலத்தினை 2021 யூன் 30 வரை நீடித்தல்
2. காலப்பகுதியின் போதான குறுகியகால சுழலும் கடன் வசதிகளின் செலுத்தவேண்டிய திகதிகளை 2021 ஓகஸ்ட் 31 வரை நீடித்தல்.
3. வெளிப்படையாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக 2021 யூன் 30 வரையான காலப்பகுதியின் போது காசோலைத் திரும்பல்களுக்கான மற்றும் கடன் அட்டைகளுக்கான தாமதக் கொடுப்பனவுகளுக்கான கட்டணங்களின் அறவீட்டினை நிறுத்துதல்.
4. கொடுகடன் தகவல் பணியகத்தின் பாதகமான பதிவினை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இத்திட்டத்தின் கீழ் தகைமையுடைய கடன்பெறுநர்களிடமிருந்து கிடைக்கும் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்காதிருத்தல்
5. தற்பொழுது காணப்படும் பயணத் தடைகள் காரணமாக பாதிக்கப்பட்ட கடன்பெறுநர்களிடமிருந்து கடன் மீள்கொடுப்பனவுகளை ஒரு சில நாட்களினால் (உயர்ந்தபட்சம்10 வேலைநாட்கள்) தாமதிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளை மேலதிக வட்டியையோ அல்லது வேறு ஏதேனும் விதிப்புக்களையோ அறவிடாது கருத்திற் கொள்ளுதல்.
சலுகைத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகின்ற தகைமையுடைய கடன்பெறுநர்கள், 2021 யூன் 21 அன்று அல்லது அதற்கு முன்னர் தொடர்புடைய உரிமம்பெற்ற வங்கிக்கு எழுத்தில் அல்லது இலத்திரனியல் வாயிலாக கோரிக்கையொன்றினை முன்வைப்பதற்கு வேண்டப்படுகின்றனர். அத்தகைய கோரிக்கையினை மேற்கொள்வதில் தாமதத்திற்கான காரணங்கள்
ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருப்பின் 2021 யூன் 21ஆம் திகதிக்குப் பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஏதேனும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்வதற்கு உரிமம்பெற்ற வங்கிகள் வேண்டப்பட்டுள்ளன.
கடன்களை மீளச் செலுத்துவதற்கு இயலளவினைக் கொண்டுள்ள தகைமையுடைய கடன்பெறுநர்கள் கொடுகடன் வசதிகளை பிற்போடுவதற்கு அல்லது மறுசீரமைப்பதற்கு கோருவதற்கு பதிலாக தொடர்ந்தும் மீள்கொடுப்பனவுகளைச் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றனர்.
மேலும், தகைமையுடைய கடன்பெறுநர்கள் மேலதிகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு உரிய உரிமம்பெற்ற வங்கியினை அல்லது வங்கிகளை தொடர்புகொள்ள முடியும். 2021 மே 25ஆம் திகதியில் உரிமம்பெற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட தொடர்புடைய 2021ஆம் ஆண்டின் 05ஆம் இலக்க சுற்றறிக்கை இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளமான www.cbsl.gov.lk இல்வெளியிடப்பட்டுள்ளது.
தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை எளிதாக்குவதற்காக, தங்கள் அன்றாட கொடுக்கல் வாங்கல்களை அதேநேர இலத்திரனியல் கொடுப்பனவு சேவைகள் / கருவிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களை இலங்கை மத்திய வங்கி ஊக்குவிப்பதுடன் மேலும் அத்தகைய சேவைகளை வழங்குவதில்/பெறுவதில் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு தேவைப்பாடுகளை கடுமையாக கடைப்பிடிக்குமாறு வங்கிகளுக்கும் பொதுமக்களுக்கும் ஆலோசனை வழங்க விரும்புகிறது.
Comments (0)
Facebook Comments (0)