சீனா இலங்கையினை வேட்டையாடுகின்றது: மைக் பொம்பே
சீனா இலங்கையினை வேட்டையாடுகின்றது அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பே இன்று (28) புதன்கிழமை குற்றஞ்சாட்டினார்.
எனினும் இலங்கையின் நண்பனாகவும், பங்காளராகவும் அமெரிக்கா செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.
"மோசமான ஒப்பந்தங்கள், நாட்டின் இறையாண்மையை மீறல், நில மற்றும் கடல் அக்கிரமம் போன்ற இடம்பெறுவதை நாங்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்" எனவும் மைக் பொம்பே கூறினார்.
சீனாவின் கம்னியூஸ்ட் கட்சி ஒரு வேட்டையாடும் கட்சியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 18 மணித்தியால உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (27) செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை வந்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இந்த விஜயத்தின் இறுதியில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மைக் பொம்பே மேற்கண்டவாறு கூறினார்.
Comments (0)
Facebook Comments (0)