ஆகஸ்ட் 10 இல் PARL இணையத்தளமும் மக்கள் காணி ஆணைக்குழுவின் அறிக்கையும் வெளியீடு

ஆகஸ்ட் 10 இல் PARL இணையத்தளமும் மக்கள்  காணி ஆணைக்குழுவின் அறிக்கையும் வெளியீடு

காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியின் (PARL) இணையத்தளம் மற்றும் மக்கள் காணி ஆணைக்குழு அறிக்கை ஆகியன வெளியீடு செய்யும் நிகழ்வு எதிர்வரும் 10 ஆம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆன்லைன் (online) மூலமான இந்த நிகழ்விற்கு அனைவரையும் PARL அழைக்கின்றது. இந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்கான முற்பதிவினை இங்கு கிளிக் செய்து மேற்கொள்ள முடியும். முற்பதிவு செய்வதற்கான இறுதி திகதி ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதியாகும்.

மக்கள் காணி ஆணைக்குழுவானது  இலங்கையில் சட்டவிரோதமான வெளியேற்றங்கள், தன்னிச்சையான மற்றும் நியாயமற்ற காணிக் கொள்கைகள் மற்றும் பாகுபாடான நடைமுறைகள் காரணமாக நிலம், வீடு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமைகள் மீறப்பட்ட பல்வேறு பின்னணிகளைக் கொண்ட ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அபிலாசைகளை கேட்கவும் ஆவணப்படுத்தவும் காணி உரிமைக்கான மக்கள் கூட்டணியால் (PARL)  மேற்கொள்ளப்பட்ட  ஒரு முன்னெடுப்பாகும். 

இவ் அறிக்கையானது இலங்கையில் 18 மாவட்டங்களில் 800 க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களோடு  ஒரு பரந்த ஆலோசனை செயல்முறையின்விளைவாகும். இந்நிகழ்வானது மக்கள் காணி ஆணைக்குழுவின் முடிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கும், மேலும் சமூகங்கள் முன்வைக்கும் பரிந்துரைகள் குறித்த பொது உரையாடலை உருவாக்குவதற்காகும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

மக்கள் காணி ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் மற்றும் சமூகம் சார் அங்கத்தவர்கள் ஆணைக்குழு  அறிக்கை தொடர்பான தங்கள் அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் மற்றும் பரிந்துரைகளை நம்முடன் பகிர்ந்து கொள்வார்கள்.

PARL தனது புதிய வலைத்தளம் மற்றும் நில உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் ஆன்லைன் தரவுத்தளத்தையும் இந்த நிகழ்வில் ஆரம்பித்து வைக்கவுள்ளது. இந்த ஆன்லைன் தரவுத்தளமானது  இலங்கையில் காணி  மற்றும் வீட்டு உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான கொள்கை வகுப்பாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அமைப்புக்களுக்கான ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிகழ்வானது தழிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தொகுத்து வழங்கப்படுவதுடன் அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பும் வழங்கப்படும்.இந்த நிகழ்வின் நேரலையினை விடியல் இணையத்தள பேஸ்புக் பக்கத்திலும் பார்வையிட முடியும்.