உயர் தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படலாம்
எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் நாடு முழுவதும்10,193 பாடசாலைகளில் 9,567 பாடசாலைகள் தற்போதுதிறக்கப்பட்டுள்ளன. அந்தப் பாடசாலைகளில் ஆசிரியர்கள்,மாணவர்களின் வருகை முன்னேற்றமாகவே இருக்கின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடி நிலைமையில் மாணவர்கள் இழக்கும் பாடசாலை கல்வி காலத்தை, அவர்களுக்கு முறையாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கின்றோம். மாணவர்களுக்கு இந்த வருட இறுதிக்குள் பாடத் திட்டங்களை பூர்த்தி செய்ய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.
ஒக்டோபர், நவம்பரில் உயர் தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தாலும் அது சில காலம் ஒத்தி வைக்கப்படலாம். எனினும் இந்த வருடத்திற்குள் மாணவர்களுக்கு பாடத் திட்டங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம். இதன்படி ஓகஸ்ட், டிசெம்பர் விடுமுறைகள் குறைக்கப்படும் என்றார் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.
Comments (0)
Facebook Comments (0)