ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு ஜுலை 13 வரை ஒத்திவைப்பு
கொவிட் - 19 இனால் உயிரிழந்த சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் பிரதி தலைவர் ஹில்மி அஹமட் உள்ளிட்ட மூவர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான, எச்.எம்.எம்.ஹரீஸ், ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒசல் ஹேரத் உள்ளிட்ட பேர் கொவிட் - 19 இனால் உயிரிழந்த சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (08) திங்கட்கிழமை உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கான அழைப்பாணை இதுவரை சென்றடையாமை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதனை அடுத்தே, இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜுலை 13ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)