கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களை ஓக்டோபர் 15க்கு முன் நிரப்புமாறு ஆளுநர் உத்தரவு
கிழக்கு மாகாணத்தில் நிவுகின்ற ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களை எதிர்வரும் ஓக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் நிரப்புவதற்கு உனடியா நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத், மாகாண பொது சேவை ஆணைக்குழுவிற்கு இன்று (20) செவ்வாய்;க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
உயர் தேசிய டிப்ளோமாவில் ஆங்கில (HNDE) பயிலுனர்களை இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யுமாறும் இதற்காக நடத்தப்பட்ட வேண்டிய எழுத்து மூலம் பரீட்சையினை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த வெற்றிடத்தினை நிரப்புவதற்காக முன்னர் நடத்தப்பட்ட பரீட்சை வினாத்தாள் தொடர்பில் குறித்த பரீட்சையில் தோன்றிய மாணவர்கள் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பான விசாரணை அறிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு ஆளுநரினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இதற்காக தயாரிக்கப்படும் வினாத்தாள் மாகாண பொது சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட ஒரு நிபுணர் குழுவால் இறுதி செய்யப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், வினாத்தாள்களைத் தயாரிப்பதிலும் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதிலும் மாகாண பொதுச் சேவை ஆணையத்தின் அதிகாரிகளோ அல்லது அதன் ஊழியர்களோ எவரும் ஈடுபடக்கூடாது என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த எழுத்து பரீட்சை முடிவுகள் செப்டம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டு, நேர்முகப்பரீட்சை ஒக்டோபர் முதல் வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் மாகாண பொது சேவை ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.
Comments (0)
Facebook Comments (0)