CIR இனால் சுற்றுச்சூழல் கதைகூறல் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

CIR இனால் சுற்றுச்சூழல் கதைகூறல் இணையத்தளம் அங்குரார்ப்பணம்

சுற்றுச்சூழல் கதைகூறல் எண்ணக்கருவிற்கு அமைவாக இலங்கை புலனாய்வு ஊடகவியல் மையம் (CIR) புதிதாக இணையத்தளமொன்றை இன்று (22) அங்குரார்ப்பணம் செய்தது.

"The Buffer Zone" எனும் பெயரில் அந்த இணையத்தளம் ஒன்லைன் ஊடாக இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

Buffer Zone இணையத்தளமானது Earth Journalism Newtwork (EJN) உடன் இணைந்து CIR இனால் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதற்கான ஒன்லைன் மூலம் இடம்பெற்ற நிகழ்வில் சுற்றுச்சூழல் துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்டு முக்கிய விடயங்களை கலந்துரையாடினார்கள்.

இந்த இணையத்தளமானது மூன்று மொழிமூலங்களிலும் வடிவமைக்கப்பட்டு, இலங்கையில் சுற்றுச்சூழல் செய்தியாளர்கள் விஞ்ஞானிகள், சூழலியலாளர்கள் மற்றும்  பயனுள்ள வகையில் எதிர்காலத்தில் இயங்கவுள்ளது.