இலங்கையில் ஆட்சியின் புதிய சகாப்தம்
துல்மி திமான்சா
நவம்பர் 14, 2024 அன்று, நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு இலங்கை தனது முதல் பாராளுமன்றத் தேர்தலை நடாத்தியது. ஜாதிக ஜன பலவேகயா என அழைக்கப்படும் தேசிய மக்கள் சக்தி (NPP) மேலாதிக்க அரசியல் சக்தியாக உருவெடுத்தது.
அக்கட்சி பாராளுமன்றத்தில் 141 இடங்களையும் தேசியப் பட்டியலில் இருந்து மேலதிகமாக 18 ஆசனங்களையும் பெற்று மொத்தமாக 159 ஆசனங்களைப் பெற்று மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. இது இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் இதுவரையில் ஒரு கட்சியினால் பெறப்பட்ட அதிகூடிய ஆசனங்களாகும்.
முன்னய பாராளுமன்றத்தில் அவர்கள் மூன்று ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்ததோடு, மூன்று சதவீதத்தினரின் கட்சி என்று அப்போதைய அரசாங்க மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவாளர்களால் ஏளனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. NPP அதன் ஆரம்பத்திலிருந்து, இலங்கையில் ஓர் உருமாற்ற அரசியல் சக்தியாக மாறும் இலட்சிய குறிக்கோளை பின்பற்றி வருகிறது.
2024 தேர்தல்கள் NPPயின் வெற்றிக்கு பங்களித்த பல முக்கியமான காரணிகளால் வடிவமைக்கப்பட்டது. அவற்றில் முதன்மையானது, முந்தைய நிர்வாகங்கள் மீது வாக்காளர்களிடையே பெருகிவரும் அதிருப்தியாகும். பல ஆண்டுகளாக தவறான நிர்வாகம், பரவலான ஊழல் மற்றும் சட்டமியற்றுபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள தொடர்பின்மை ஆகியவை ஆழ்ந்த விரக்தியை உருவாக்கியது.
இந்த மனக்குறைகள் பொருளாதார ஸ்திரமின்மை, பொதுச் சேவைகளில் வினைத்திறனின்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை ஆகியவற்றால் மேலும் தீவிரமடைந்ததுடன் இதன் முக்கிய உதாரணங்களில் VSF அவதூறும் உள்ளடங்குவதுடன், அவை இறுதியில் பலவற்றில் ஒன்றாக அரசாங்கத்தை வீழ்த்தியது.
NPPயின் கொள்கைகள் மற்றும் பிரச்சார செய்திகள் வாக்காளர்களிடம் வலுவாக எதிரொலித்ததுடன், தற்போதைய நிலைக்கு தெளிவான மாற்றீட்டை வழங்குகிறது. கட்சி தன்னை முறையான சீர்திருத்தத்தின் வெற்றியாளராக நிலைநிறுத்திக் கொண்டதுடன், அடுத்தடுத்த அரசாங்கங்களை பாதித்த ஊழல் மற்றும் வினைத்திறனின்மை கலாச்சாரத்தை அகற்றுவதாக உறுதியளித்தது.
பொறுப்புக்கூறல், ஒருமைப்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் இந்தச் செய்தி, அர்த்தமுள்ள மாற்றத்திற்காக ஆர்வமாக காத்திருந்த வாக்காளர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அணுகுமுறை குறிப்பாக நாட்டின் இளைஞர்களிடம் வலுவாக எதிரொலித்ததுடன், அவர்கள் NPPயை அதன் தேர்தல் வெற்றிக்கு ஊக்குவிப்பதில் முக்கிய குடித்தொகையாக ஆனார்கள்.
மேலும், NPP இன் தனித்துவத்தின் மீதான கூட்டு நிர்வாகத்தின் மூலோபாய கவனம் அதன் வெற்றியில் ஒரு முக்கிய வகிபங்கைக் கொண்டிருந்தது. தனிப்பட்ட வேட்பாளர்களைக் காட்டிலும் கட்சி மற்றும் அதன் கொள்கைகளுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம், நிறுவன சீர்திருத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் வாக்காளர்களின் மனநிலையை மாற்றுவதற்கு NPP முயன்றது.
ஊழலை வேரறுத்து, இன்னமும் பொறுப்புள்ள அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கான அவர்களின் பிரச்சாரம், பல தசாப்தங்களாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளால் ஏமாற்றமடைந்த மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது.
இன மற்றும் குடித்தொகை அடிப்படையில் ஆதரவை ஈர்க்கும் கட்சியின் திறன் அதன் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியது. NPP பாரம்பரியமாக விசுவாசமான பிராந்தியங்களான இலங்கையின் தென்மேற்கு நாற்கரத்தில் ஈர்ப்பைப் பெற்றது மட்டுமல்லாமல், தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளிலும் ஊடுருவியமை அதன் ஒருங்கிணைக்கும் செய்தி மற்றும் உள்ளடங்கலான கொள்கை கட்டமைப்பிற்கு ஒரு சான்றாகும்.
மட்டக்களப்பு தவிர்த்து, மொத்தமாக 10 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை NPP வெற்றிகரமாக தெரிவு செய்தது. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் யாழ்ப்பாணத்தில் இருந்து மூவரும், வன்னி மற்றும் பதுளையில் இருந்து தலா இரண்டு பேரும், நுவரெலியா, மாத்தறை மற்றும் மட்டக்களப்பில் இருந்து தலா ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
மேலும், கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை நியமித்ததன் மூலம், உள்ளடங்கலான பிரதிநிதித்துவத்திற்கான NPP இன் அர்ப்பணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டது.
ஆட்சியமைப்பதற்கான வலுவான ஆணையுடன், NPP இப்போது அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் வாக்காளர்களின் அதிகரித்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வது போன்ற சவாலை எதிர்கொள்கிறது. இந்த முயற்சியில் அவர்கள் பெற்ற வெற்றியானது, இலங்கையின் அரசியல் மற்றும் நிர்வாக பரப்பை வரவிருக்கும் ஆண்டுகளில் மீள்வரையறை செய்யும்.
ஜனாதிபதித் தேர்தலின் போது இந்த பிராந்தியங்கள் மற்றைய கட்சிகளுக்கு ஆதரவாக இருந்த போதிலும், பல தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகள் உட்பட தேசிய மக்கள் கட்சியின் பெரும் ஆணை, வாக்காளர்களின் உணர்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது. ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள், NPP வெற்றிகரமாக தன்னை ஒருங்கிணைக்கும் அரசியல் சக்தியாக மாற்றியமைத்ததுடன், பல்வேறு அரசியல் பின்னணியில் இருந்து ஆதரவாளர்களை ஈர்த்தது.
இது பெரும்பாலும் எல்லாவற்றையும் உள்ளடக்கிய நோக்கினை மையமாகக் கொண்ட ஓர் மூலோபாய பிரச்சாரத்தின் மூலம் அடையப்பட்டதுடன், இது "பாராளுமன்றை தேசிய மக்கள் சக்தியுடன் நிரப்புவோம்" என பிரபலமாக வெளிப்படுத்தப்பட்டது. தனிப்பட்ட வேட்பாளர்களைக் காட்டிலும் கூட்டுக் கட்சி நிகழ்ச்சி நிரலின் முக்கியத்துவத்தை கட்சி தொடர்ந்து வலியுறுத்தியதுடன், இது கட்சியின் உள்ளக ஜனநாயகம் பற்றாக்குறைக்கு சான்றாக சிலரால் விமர்சிக்கப்பட்டாலும் கூட தனிப்பட்ட அரசியலை விட நிறுவன ரீதியான மாற்றத்தில் கவனம் செலுத்துகிறது.
NPPயின் வரலாற்று வெற்றியாக இருந்தபோதிலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பாராளுமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததுடன், வாக்களிக்க தகுதியுள்ள வாக்காளர்களில் 65% மட்டுமே வாக்களித்தனர்.
சமீபத்திய தேர்தல், பாராளுமன்றத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தின் முன்னெப்போதுமில்லாத நிலைகளால் முன்னிலைப்படுத்தப்பட்டு அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றகரமான ஆட்சியை முன்னெடுப்பதில் குறிப்பிடத்தக்க மைற்கல்லாக பதிவாகியது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றத்தில் 21 பெண்களும் அவர்களில் 19 பேர் NPP உறுப்பினர்களாகவும் உள்ளதுடன், பெண் அரசியல் பங்கேற்பில் தெற்காசிய சகாக்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியிருக்கும் ஒரு நாட்டிற்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். முன்பு, இலங்கையின் பாராளுமன்றத்தில் வெறுமனே 12 பெண்கள் மட்டுமே இருந்ததுடன் அது மொத்த உறுப்பினர்களில் 5.8% ஆகும்.
இலங்கையில் பெண் பிரதிநிதித்துவம் இல்லாதது சமீபத்திய ஜனாதிபதித் தேர்தலின் போது மேலும் சுட்டிக் காட்டப்பட்டதுடன், அதில் பெண்கள் யாரும் போட்டியிடவில்லை. எவ்வாறாயினும், கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக நியமிக்கப்பட்டமை, அரசியல் கட்சிகள் முழுவதும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்த கலந்துரையாடல்களை ஊக்குவித்தது.
இந்த முன்னேற்றங்கள் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், புதிய அமைச்சரவையின் அமைப்பு சில கரிசனங்களை எழுப்பியுள்ளது. 21 அமைச்சரவை உறுப்பினர்களில், இரண்டு பேர் மட்டுமே பெண்கள் என்பதுடன், சில விமர்சகர்கள் இதனை முக்கிய தலைமைத்துவ வகிபாகங்களில் பால்நிலை பிரதிநிதித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு தவறவிட்ட ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றனர்.
இந்த ஏற்றத்தாழ்வு, உள்ளடங்கலான தன்மையை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளுக்கு மத்தியிலும், நிர்வாகத்தின் மிக உயர்ந்த மட்டங்களில் சமநிலையான பிரதிநிதித்துவத்தை அடைவதில் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகிறது.
மேலும், அரசியல் அமைப்புக்கு அவசியமில்லை என்றாலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 140 உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு முற்றிலும் புதியவர்களாவர். புதிய பாராளுமன்றம் 2024 அக்டோபர் 18 அன்று கூடியதுடன், அதில் 21 அமைச்சர்கள் அடங்கிய மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த சட்டசபை பாரம்பரியத்தில் இருந்து குறிப்பிடத்தக்க இடைவெளியைக் குறிப்பதுடன், பல சிரேஷ்ட அரசியல்வாதிகள் புதியவர்களுக்கு வழிவிடும் தலைமைத்துவத்தின் முழுமையான மறுசீரமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த புதிய பாராளுமன்றத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் உறுப்பினர்களிடையே உள்ள உயர் மட்டத்திலான தொழில்முறை நிபுணத்துவம் ஆகும். NPP இன் அனைத்து 159 பிரதிநிதிகளும் நன்கு படித்த வல்லுநர்கள், பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இலங்கையில் திறமையான நிர்வாகத்திற்காக விசேட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினராக கடமையாற்றும் முதலாவது பார்வையற்ற நபராக சுகத் வசந்த டி சில்வா நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவரது நியமனம் நாட்டின் சட்டவாக்க செயன்முறைகளில் இயலாமையுடைய சமூகத்திற்காக அதிகமாகவோ அல்லாவிடின் குறைவாகவாவது குரல் வழங்குகின்றது.
தேசிய அரசியலின் உயரடுக்கு மேலாதிக்கம் என்று NPP அடிக்கடி குறிப்பிடுகின்ற 75 ஆண்டுகால சாபத்தை இலங்கை பிள்தள்ளி விட்டமை, "ஆசியாவின் பழமை வாய்ந்த ஜனநாயகத்தில்" அதிகரித்த உள்ளடங்கல் மற்றும் அரசியல் பங்கேற்பை நோக்கிய பாதையில் முக்கியமான மைல்கற்களாகும்.
துல்மி திமான்சா சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர மாணவர் என்பதுடன் Factumயில் பணிபுரியும் ஆராய்ச்சி பயிலுனராவார். அவரை dulmi@factum.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Comments (0)
Facebook Comments (0)