The Students Visa நிறுவனத்தினால் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கருத்தரங்கு
உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கருத்தரங்கொன்று The Students Visa நிறுவனத்தினால் அண்மையில் கொழும்பு – 01 இலுள்ள The Hatch Works கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஐக்கிய இராச்சியத்தின் தனியார் உயர் கல்வி முறையை மையமாகக் கொண்ட குழுவினர் கலந்துரையாடல் “Educate to Elevate" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது வெளிநாட்டில் கிடைக்கும் பரந்த கல்வி வாய்ப்புக்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களின் உயர்கல்வி பயணத்தைத் தொடர்ந்து மாணவர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இக்கருத்தரங்கில் Nitin Bhasson - Territory Manager for South Asia, University of East London, Kranthi Reddy - Regional Manager, University of Wolverhampton and Abhishek Kumar - Country Head UK, Infinite Group ஆகியோர் மாணவர்களுக்கு விளக்கமளித்தனர்.
The Students Visa நிறுவனத்தின் ஸ்தாபகர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரயீஸ் உல் ஹக் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் The Students Visa நிறுவனத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதம செயற்பாட்டு அதிகாரி நுஸ்ரி மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)