உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடிய HNB Finance
கடந்த ஆண்டுகளைப் போலவே, உலக சிறுவர் தின கொண்டாட்டங்களை HNB Finance PLC இந்த ஆண்டும் மிக பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்தது.
உலக சிறுவர் தினத்துடன் இணைந்து, HNB Finance கிளைகள் மற்றும் தலைமை அலுவலக ஊழியர்களால் நடாத்தப்பட்ட கலைப் போட்டியின் இறுதிச்சுற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 90 கலைச் சித்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வு HNB Finance தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுடன், இதற்கு HNB Financeஇன் 'யாலு சிறுவர் சேமிப்புக் கணக்கு' பூரண அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
HNB Finance நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் தலைமையில், சிறுவர் தின கொண்டாட்டக் கலைக் கண்காட்சி பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்விற்கு பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த மற்றும் HNB Financeஇன் சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட ஓவியங்களை உருவாக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தலைமை அலுவலக ஊழியர்கள் குழு ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் வாசிக்க: புல்மோட்டையில் நடந்தது என்ன?
நட்புசார்ந்த ஓவியங்களை வரைந்து வெற்றிபெற்ற சிறுவர்கள் வயது அடிப்படையில் HNB Finance இறுதிச் சுற்றுக்காக தெரிவு செய்ததுடன் கல்வி அமைச்சின் நுண்கலைகள் பாடத்தின் முன்னாள் ஆலோசகர் தயாவம்ச குமாசாருயின் மேற்பார்வையில் ஓவியங்கள் தெரிவு இடம்பெற்றது.
HNB Finance நிறுவனம், ஓவியங்கள் மற்றும் வெற்றி பெற்ற ஓவியங்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இதற்கு பங்களித்த அனைத்து குழந்தைகளுக்கும் மதிப்புமிக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளதுடன் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய யாலு சிறுவர் கணக்குகளை ஆரம்பிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அட்லஸ் நிறுவனமும் வெற்றியாளர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்க இணை அனுசரணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. HNB Finance உலக சிறுவர் தின கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற இந்த மேஜிக் ஷோ, நிகழ்வில் கலந்து கொண்ட சகல சிறார்களையும் பரவசப்படுத்தும் வகையில் இடம்பெற்றது.
HNB Financeஇன் உலக சிறுவனர் தின கொண்டாட்டம் குறித்து கருத்து தெரிவித்த HNB Financeஇன் முகாமைத்துவப் பணிப்பளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத்,
“ஒவ்வொரு வருடமும் HNB Finance ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில், உலக சிறுவர் தின கொண்டாட்டம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. சமுதாயத்திற்குப் பொறுப்பான ஒரு நிறுவனமாக, நமது நிறுவனத்தில் இருந்து சமுதாயத்திற்கு நிறைவேற்ற வேண்டிய கடமையும், நமது நாட்டின் எதிர்காலத்தின் ஒரு பகுதியாக அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதற்கான பொறுப்பும் உள்ளது.
எனவே, இந்தப் பொறுப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில், ‘யாலு’ சிறுவர் கணக்கு மூலம் சேமிப்பதன் மதிப்பை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தொடர்ந்து நினைவூட்டுகிறோம்." என தெரிவித்தார்.
மேலும் வாசிக்க: திட்டமிட்ட முறையில் இயங்காமையினால் குப்பை மேடாக மாறிய அஷ்ரப் நகர் நில நிரப்புதளம்
Comments (0)
Facebook Comments (0)