சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராக நியமனம்
சிரேஷ்ட ஊடகவியலாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் 3 ஆம் திகதி கிங்ஸ்லி ரத்நாயக்க கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். கிங்ஸ்லி ரத்நாயக்க இலங்கையின் வானொலி வரலாற்றில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்ட ஊடகவியலாளர் ஆவார்.
தெபானமயில் இருந்து 24 மணி நேரமும் இலங்கையில் ஔிபரப்பான முதலாவது சிங்கள மொழி மூல பண்பலை வரிசையான சிரச FM இன் முதலாவது அறிவிப்பாளராக கிங்ஸ்லி ரத்நாயக்க கடமையாற்றினார்.
சிரச FM இன் ஆரம்ப உறுப்பினரான கிங்ஸ்லி ரத்நாயக்க ஒரு அறிவிப்பாளராக வானொலி துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், அதற்கு சான்றாக பல விருதுகளையும் தன்வசப்படுத்தினார்.
சிறந்த நிர்வாகத்திறன் கொண்ட அவர், கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தில் நிறைவேற்று அதிகாரிகள் மத்தியில் பாராட்டுதல்களைப் பெற்ற ஒருவராவார். சிரச FM மற்றும் சிரச TVஇல் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்த கிங்ஸ்லி ரத்நாயக்க இன்றும் The Voice நிகழ்ச்சி மூலம் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இவர் ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)