கொவிட் முகாமைத்துவம்: இராணுவத்திடமிருந்து சுகாதார துறைக்கு மாற்றப்பட வேண்டும்: ஜீ. சுகுணன்

கொவிட் முகாமைத்துவம்: இராணுவத்திடமிருந்து சுகாதார துறைக்கு மாற்றப்பட வேண்டும்: ஜீ. சுகுணன்

கொவிட் - 19 தொடர்பான விடயங்களை இராணுவ முகாமைத்துவத்தை விடுத்து, அதை சுகாதார துறையிடம் பூரணமாக ஒப்படைக்க வேண்டும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அத்துடன், சுகாதாரம் தொடர்பான முடிவுகளை சுகாதார பணிப்பாளா நாயகமே எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டத்தில் கீழ் மாகாண சபைகளின் அதிகாரத்தின் கீழ் காணப்படும் சுகாதார துறை, மத்திய அரசின் கீழ் முற்று முழுதாக மாற்றப்பட வேண்டும் எனவும் டாக்டர் சுகுணன் கூறினார்.

'கொவிட் - 19 தடுப்பு நடவடிக்கைகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும்' எனும் தலைப்பில் 14 விடயங்களை உள்ளிடக்கிய பதிவொன்றை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன், பேஸ்புகில் பதிவேற்றியிருந்தர்.

குறித்த பேஸ்புக் பதிவிலேயே மேற்படி விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாவன:

1. பிரயாணத்தடை அவசியமற்றது.
2. தடுப்பூசிகளை உடனடியாக பெறவேண்டும்
3. மக்களின் பாதுகாப்பை அவர்களே பார்க்க வேண்டும்
4. அறிகுறி/அபாயம் அற்றவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.
5. Call Centre network ஐ உடனடியாக ஸ்தாபிக்க வேண்டும்
6. ஏனைய சகல நடவடிக்கைகளையும் சாதாரண நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
7. அனைத்து ஒன்றுகூடல்களையும் தவிர்க்க வேண்டும்.
8. இராணுவ முகாமைத்துவத்தை விடுத்து அதை சுகாதார துறையிடம் பூரணமாக ஒப்படைக்க வேண்டும்.
9. தனிமைப்படுத்தல் சட்டத்தை பலப்படுத்தி சுகாதார, பொலிசாரை பலப்படுத்த வேண்டும்.
10. சுகாதார துறையில் களையெடுப்பு செய்து உரிய பொறுப்புகள் திறமையானவர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்ட வேண்டும்.
11. கொவிட் ஆராய்ச்சி மையம் ஒன்றை பல்கலைக்கழகம், மருத்துவ ஆராய்ச்சி மையம் இணைந்ததாக விரிவுபடுத்த வேண்டும்
12. சுகாதாரம் சம்பந்தமான முடிவுகளை சுகாதார பணிப்பாளர் எடுக்க வேண்டும்
13. 13 திருத்த சட்டத்தில் சுகாதார துறை மாகாண சபையிலிருந்து மத்திய அரசின் கைகளுக்கு முற்று முழுதாக மாற்றப்பட வேண்டும்.
14. அரசியல் தலைவர்கள் இணைந்ததான கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.