தென்னை மரம் வெட்ட GSஇன் அனுமதி அவசியம்
மரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்கள் வெட்டுவதை அரசாங்கம் தடைசெய்துள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை விவசாய அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே ஜுன் 17ஆம் திகதி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார்.
அமைச்சரினால் வெளியிடப்பட்ட 2232/33ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தடைசெய்யப்பட்ட மரங்களின் பட்டியலிலும் தென்னை மரமும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பின்படி, எதிர்காலத்தில் தென்னை மரங்களை வெட்டுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஆகியோரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)