'திறந்த பல்கலையின் உப வேந்தர் பதவிக்கு புதியவர்களின் பெயர்கள் முன்மொழியப்படும்'
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்கு புதியவர்களின் பெயர்கள் விரைவில் முன்மொழியப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இந்த நியமனம் தொடர்பில் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய உப வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.
அது போன்று புதிய பெயர்களை கோரும் அதிhரமும் ஜனாதிபதிக்கு உ;ள்ளது. இது தொடர்பில் பல்கலைக்கழக பேரவை மறுபரிசீலனை செய்து விரைவில் புதிய பெயர்களை உப வேந்தர் பதவிக்கு முன்மொழியும் என கல்வி அமைச்சர் கூறினார்.
எவ்வாறாயினும் இது முதற் தடவையல்ல. கடந்த நல்லாட்சிக் காலத்திலும் இதுபோன்று இடம்பெற்றுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Comments (0)
Facebook Comments (0)