எவரும் கண்டு கொள்ளாத ஆணைக்குழுக்கள்
-கீர்த்தி தென்னகோன்-
வீட்டில் வளர்க்கப்படும் மாட்டின் முதுகில் சூடு குத்தப்பட்டு அதனை நடமாடவிட்டதன் பின்னர் எவரும் அதனை கண்டு கொள்வதில்லை. அது சுதந்திரமாக நடமாடி திரியும். நமது தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை மேய்ந்தமைக்காக அதற்கு எதிராக எவரும் பொலிஸில் முறைப்பாடு செய்வதுமில்லை அது இறந்தாலும் எவரும் அதற்காக கவலைப்படுவதில்லை.
அது உயிர் வாழ்வதாக கருதி எவரும் விசேடமாக மகிழ்ச்சியடைய போவதுமில்லை. 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கைவிடப்பட்ட முதுகில் சூடு குத்தப்பட்ட மாட்டை போன்றதாகும். குறைந்தபட்சம் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்பார்க்கும் அரசியல் கட்சியொன்று கூட, இப்போது அரச சேவை இலஞ்ச ஊழல், பொதுப் பயன்பாடுகள், அரசகரும மொழிகள் எல்லை நிர்ணயம் போன்ற ஆணைக்குழுக்கள் பற்றி கதைப்பதில்லை.
ஞானசார, துமிந்த சில்வா போன்றவர்களுக்கு கொடுக்கின்ற முக்கியத்துவம் கூட இதற்கு வழங்கப்படுவதில்லை. சிறந்த மாவட்ட செயலாளராகவும் கௌரவத்துக்குரிய சுங்கப் பணிப்பாளர் நாயகமாகவும், அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றிய பி.எஸ்.எம். சார்ள்ஸ் வட மாகாண ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜீவன் தியாகராஜா - தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தாததைப் போன்று இந்த இடத்திலும் இந்த விடயம் பற்றி சுதந்திரமான முறையில் கருத்துக்கள் அறியப்படவில்லை. இது பற்றி அறிக்கைகளாே பாராளுமன்ற கூற்றுக்களோ குறைந்தபட்சம் நகைச்சுவகைளோ கார்ட்டூன்களாே வெளியாகவில்லை .
கடந்த வாரம் தேர்தல் ஆணைக்குழுவில் ஊடகவியலாளர் மாநாடொன்று நடைபெற்றது. அதன்போது எவரும் இந்த நியமனம் பற்றி கேள்வி எழுப்பவில்லை. தேர்தல் ஆணைக்குழுவின் இந்த ஊடகவியலாளர் மாநாடானது நாட்டின் வரலாற்றில் எந்த ஒரு பிரதான அலைவரிசையிலும் செய்தியாகக் கூட இருக்கவில்லை.
ஏனைய ஆணைக்குழுக்களை விட தேர்தல் ஆணைக்குழு அரசியலுக்கு மிகவும் முக்கியமானது என்பதனால் இதனை எழுதுகிறேன். முன்னாள் போராளியான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மிக நெருங்கிய சகாவான டயஸ்போராவின் தலைவருமான ஜீவன் தியாகராஜா - தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக அரசியலமைப்பின் 14ஆவது உறுப்புரையின் 103ஆவது சரத்துக்கு (தொழில்வான்மை, நிர்வாகம், கல்வி ஆகிய துறைகளில் உயர் நிலையை அடைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு) புறம்பாக நியமிக்கப்பட்டார்.
கஃபே, மனித உரிமைகள் கேந்திர நிலையம், ஊழல் ஒழிப்பு முன்னணி, உமா ஒய போராட்டக்குழு என்பனவற்றின் உறுப்பினரான கீர்த்தி தென்னக்கோன், ஆளுநராக நியமிக்கப்பட்ட போது சமூக ஊடகங்களில் ஆச்சரியமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
சுமார் 112 பதிவுகளை நான் சேகரித்து வைத்திருக்கின்றேன். தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவரும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவரும் இதில் அடங்குகிறார்கள். ஒக்டோபர் 27ஆம் திகதி சேதன பசளை பற்றி நான் எழுதியிருந்த கட்டுரைக்கு தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவர் நையாண்டியாக எழுதியிருந்தார்.
முப்பத்தையாயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்களில் ஒருவரான கீர்த்தி தென்னக்கோன் மீதிருந்த கரிசனையில் ஐந்தில் ஒரு பகுதி கூட ஜீவன் தியாகராஜாவின் மீது ஏன் இருக்கவில்லை. ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட திருமதி சார்ள்ஸ் பற்றி ஏன் கவனம் செலுத்தவில்லை.
இளம் ஊடகவியலாளர் சங்கம் கூட இது பற்றி ஏன் கவனம் செலுத்தவில்லை. சுமையிழுக்கும் மாடுகள் இவ்வாறு கைவிடப்பட்ட மாடுகளாக மாறும் போது அது தோட்டத்துக்குள் நுழையும் வேளையில் எவரும் பதற்றம் அடைவதில்லை. இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் முன்மாதிரி இந்திய தேர்தல் ஆணைக்குழு ஆகும்.
இந்தியாவின் 11ஆவது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி எம்.எஸ். கில் (1996 2001) பதவியில் இருந்து விலகி 7 வருடங்களின் பின்னர் தேர்தல் மூலம் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு அமைச்சரான வெற்றி சமூகத்தில் மாறுபட்டு கலந்துரையாடல்களை ஏற்படுத்தியது.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று முகநூல் ஊடாக பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு தேர்தல் ஆணையாளர் இவ்வாறு பதில் அளித்தார். "மஹிந்த தேசப்பிரிய ஆகிய நான் ஜனாதிபதித் தேர்தலிலோ, பொது தேர்தலிலாே போட்டியிடப் போவதில்லை,
அவ்வாறான கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டாம் என்று நான் கோரிக்கை விடுக்கிறேன், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த ஒருவர் தேர்தலில் போட்டியிடுவது தார்மீகத்திற்கு முரணானதாகும் என்று கருதுகிறேன் என்பது எனது நிலைப்பாடாகும்" என கூறினார்.
தேர்தல் ஆணைக்குழு என்றும் முன்மாதிரியாக செயல்பட வேண்டும். ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் நிபந்தனையுடனேயே ஜீவன் தியாகராஜா வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார். மஹிந்த தேசப்பிரியவின் முன்மாதிரி ஜீவன் தியாகராஜாவுக்கு பொருந்துவதாக அமையவில்லை.
நாட்டு மக்களுக்கு அது பொருந்துவதாகவும் அமையவில்லை. 2019ஆம் ஆண்டு தேர்தல் கண்காணிப்பாளர் ஒருவருக்குக்கு இருந்த முக்கியத்துவம் கூட 2021ஆம் ஆண்டு தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு முக்கியமானதாக அமையவில்லை. 17ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுவுக்கு பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிங்ஸ்லி ரோட்ரிகோவின் பெயர் முன்மொழியப்பட்ட போது இதைவிட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் கூடுதலாக கரிசனைகாட்டின.
அன்று தனி நபராக இருந்த கிங்ஸ்லி ரோட்ரிகோவுக்கு இருந்த முக்கியத்துவம் இன்று சார்ள்ஸ் - தியாகராஜா மாற்றத்திற்கு இல்லை. அவ்வாறு இல்லையெனில் இந்தியாவின் புகழ்பெற்ற ஒன்பதாவது பிரதம ஆணையாளரான வீ.எஸ்.ராம தேவி கர்நாடகா மாநிலத்தில் ஒரே ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ராம தேவிக்கு நல்லதாக இருப்பின் தியாகராஜாவுக்கு தீமையாக அமையாது என்று முழு நாடும் சிந்திப்பதாக இருக்க வேண்டும். 2019ஆம் ஆண்டு அன்றைய தேர்தல் ஆணைக்குழு கீர்த்தி தென்னகோனினால் கபே அமைப்பின் கண்காணிக்கும் அதிகாரத்தை வரையறுத்தது.
தற்காலிகமாக இடைநிறுத்துவதாகவும் அறிவித்தது. இப்போது தேர்தல் ஆணைக்குழுவும் அதன் (உறுப்பினர்களும்) யாராலும் கண்டுகொள்ளப்படாமையினாலாே என்னவோ அதே ஆணைக்குழு ஜீவன் தியாகராஜாவை ஆளுனர் என்ற ரீதியில் வரவழைத்து நினைவுச் சின்னம் ஒன்றையும் பரிசாக வழங்கியது. பதவி உயர்வு பெற்று செல்கின்றவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தது.
கொவிட் பரவல் இல்லாவிட்டால் அவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றையும் ஒழுங்கு செய்திருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. தேர்தல் ஆணைக்குழுவின் கட்டடத்தில் ஐந்து ஆணையாளர்களின் படங்கள் இருந்தாலும் ஆறாவது ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் படம் அங்கு காட்சிப்படுத்தப்படவில்லை என்பது எவருக்கும் நினைவில் இருக்காது.
தேர்தல் ஆணைக்குழுவின் தொடர்ச்சி என்ற விடயமானது முன்னாள் தேர்தல் ஆணையாளரிடமிருந்தேனும் ஆரம்பிக்கப்படுவது அவசியமாகும். கடந்தகால சம்பவம் ஒன்றை ஞாபகமூட்டுகிறேன். பதுளை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் உதவித் தேர்தல் ஆணையாளராக இருந்த டீ.கே. தசநாயக்க, 1977ஆம் ஆண்டில் அவரது திறமை நேர்மை பக்கசார்பின்மை ஆகிய பண்புகளினால் அனுராதபுர மாவட்ட செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அவர் ஓய்வுபெற்ற போதும் மத்திய மாகாணத்தின் ஐந்தாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார். சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய அதிகாரிகள் மீது முன்பிருந்த அரசியல்வாதிகள் விருப்பம் கொண்டிருந்தார்கள். தசநாயக்கவின் நியமனத்தோடு சார்ள்ஸின் தலைவிதி தியாகராஜாவின் நியமனம் என்பனவற்றை அளவிடு செய்யும் பொறுப்பை உங்களுக்கு விட்டுவிடுகிறேன்.
ஆளுநர் பதவியானது உத்தியோகபூர்வ பதவிநிலையில் தேர்தல் ஆணைக்குழுவை விட உயர்ந்த இடத்தில் உள்ளது என்பதை இங்கு வழங்கப்பட்டுள்ள செய்தியின் மூலம் தெளிவாகிறது. அதாவது ஜீவன் தியாகராஜாவை போன்று பதவிகளை நோக்கிச் செல்ல தேர்தல் ஆணையாளர்களுக்கு வாய்ப்பு காணப்படுகிறது.
தேர்தல் ஆணையாளர்கள் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து வெளிநாட்டு ராஜதந்திரிகளாக நியமிக்கப்படும் சம்பிரதாயம் காணப்பட்டது. முன்னாள் தேர்தல் ஆணையாளர் பீலிக்ஸ் டயர்ஸ் அபேசிங்க, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். அது போன்று பியதாச இத்தாலி தூதுவராக அனுப்பப்பட்டார்.
சந்தராந்த சில்வா பாதுகாப்புச் செயலாளராக பணியாற்றியதன் பின்னர் கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். ஆனால் கனடேிய அரசாங்கம் அவரது நற்சான்றிதழ் பத்திரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ( அருள்பிரகாசம் பண்டாரநாயக்கவின் விருப்பப்படி தேர்தல் தினத்தை மாற்றியமைப்பதற்கான யோசனையை நிராகரித்தமையினால் சகல தேர்தல் ஆணையாளர்களுக்கும் கிடைக்கவேண்டிய இரண்டு வருட பதவிக்காலம் அவருக்கு கிடைக்கவில்லை)
மஹிந்த தேசப்பிரிய தற்போது பதவிவகித்து வருகின்றமையினால் அவர் தொடர்பில் எந்த விடயத்தையும் இங்கு எழுதவில்லை. திருமதி சார்ள்ஸ், முன்னாள் தெரிவத்தாட்சி அதிகாரி ஆவார். ஈபிடிபி கருணா பிள்ளையான் ஈரோஸ் அமீர் அலி ஹிஸ்புல்லாஹ் ,அமீர் அலி ,ரிசாத் பதியுதீன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இராயப்பு ஜோசப் ஆண்டகை, போன்று தரப்புகளை முகாமைத்துவம் செய்த மாவட்ட செயலாளர் ஆவார்
ரிசாத் பதியுதீன் 2010ஆம் ஆண்டில் அவுட் ஒப் பவுண்டி செய்தது எனக்கு நினைவில் இருக்கிறது 2010ஆம் ஆண்டில் இலங்கையின் மிகப்பெரிய பதாதையாக இருந்த பிள்ளையானின் பதாகையை வெட்டியதையும் அறிவேன் .இராயப்பு ஜோசப் ஆண்டகையுடன் முரண்படுவதையும் நினைவில் கொள்கின்றேன். 2010ஆம் ஆண்டில் வாக்காளர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதிகளை வழங்கியதையும் அறிவேன்.
யுத்ததத்தோடு நிர்வாகம் செய்த அவர் எல்ரிரிஈயிடமிருந்து உயிரையும் பாதுகாத்துக் கொண்டதோடு அரசாங்க தொழிலையும் தக்கவைத்துக் கொண்டார். பெண்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற விடயத்தை அடிப்படையாகக்கொண்டு அவர் சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
தபால் திணைக்களம் அதன் உயர் பதவிக்கு ஒருவரைத் தேடிக் கொண்டிருந்த வேளையில் 35 சுங்க அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அவர்களை வெளியேற்ற வேண்டாம் என்று கூறிய பணிப்பாளர் நாயகம் இவராவார். சுகாதார அமைச்சில் பல வருடங்களாக நிலவிய முகாமைத்துவம் தொடர்பான நெருக்கடிகளை ஒரு மாதத்திற்குள் இவர் தீர்த்து வைத்தார்.
அவர் இருபது வருடங்களாக நிறுவனங்களின் தலைவராக பணியாற்றினார். அவருக்கெதிராக எந்த ஒரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று அவர் தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு உறுப்பினர் மாத்திரமே ஆவார்.
ஆனால், அது பற்றி எவரும் இன்று கதைப்பதில்லை. 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் எவராலும் கண்டுகொள்ளப்படாத நிறுவனம் அன்றி வேறு எதுவாகத்தான் இருக்க முடியும் . அவர் யுத்த காலத்தில் வவுனியா மட்டக்களப்பு மாவட்டங்களில் நிர்வாக ரீதியில் வெற்றி பெற்றார்.
யுத்தத்தின் பின்னரான காலப் பகுதியில் சிறந்த கௌரவத்தினை பெற்றார். வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் எந்த ஒரு அரசியல் முகாமையும் சாராமல் செயற்பட்டமையினால் அவர் வட மாகாணத்திலிருந்து நீக்கப்பட்டார். வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துசேன அந்தப் பதவிக்கு சார்ள்ஸின் பரிந்துரையால் நியமிக்கப்படவில்லை.
வட மாகாணத்தின் பிரதம செயலாளராக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகலும் தெரியாத ஒருவர் நியமிக்கப்பட்ட போது சார்ள்ஸ் பதிவியிழந்தார். விசேட தரத்திலான நிர்வாக சபை 14 பதவிகள் (மாகாண சபைகள் 8 + மாவட்ட செயலாளர்கள் 5) ஆகும் இந்தப் பதவிகளில் நிர்வாக மொழிகள் தெரியாத 1998ஆம் ஆண்டுக்குரிய கனிஷ்ட அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்ட தன் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றி நிர்வாக அதிகாரிகளேனும் பேசுவதில்லை.
திருமதி சார்ள்ஸ் கௌரவமான முறையில் பதவியிலிருந்து நீக்கப்படவில்லை. திருமதி சார்ள்ஸ் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதலாவதும் ஒரே ஒரு பெண்ணும்மாவர் என்ற அடிப்படிப்படையில் மாத்திரம் அவர் முக்கியமாக கருதப்படவில்லை. திருமதி சார்ள்ஸின் பெயர் அங்கீகரிக்கபடுவதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழு அற்புதமான ஒரு வேலையை செய்திருந்தது.
ஓய்வுபெற்ற தமிழ் இனத்தைச் சேர்ந்த நில அளவையாளர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரின் பெயரை ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்து கடிதம் ஒன்றை தயாரித்திருந்தது. ஆணைக்குழுவுக்கு தமிழ் பிரதிநிதித்துவம் என்ற ரீதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. (அரசியலமைப்பில் அவ்வாறானதொரு ஏற்பாடு இல்லை)
ஆணைக்குழுவின் உறுப்பினர்களால் மற்றுமொரு ஆணைக்குழு உறுப்பினரை பரிந்துரைக்கும் இந்த முறை புதிய சம்பிரதாயமாகும். இது பற்றி யாரும் கோபமடையவோ நையாண்டி செய்யவாே கேலி செய்யவோ மாட்டார்கள். மனிதர்களின் உள்ளங்களை நோகடிக்காத வகையில் எழுதுவதற்கு முயற்சிக்கின்றேன். இந்த கட்டுரையின் மூலம் ஆணைக்குழுவின் எந்த ஒரு ஆணையாளரும் மனமுடைந்து கொள்ளமாட்டார்கள் என்று நான் நம்புகின்றேன்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கைவிடப்பட்ட மாட்டை போன்று எவருக்கும் பயனற்றதாக இருக்கும் என்பதை அறிந்து அதற்கெதிராக நான் நீதிமன்றத்தை நாடினேன்.
என்னால் முடியுமான அனைத்தையும் செய்தேன். எனது அன்றைய எண்ணம் சரியானது என்பதை இப்போது உணர்கின்றேன். சகல ஆணையாளர்களும் ஆளுநர்களாக மாறினாலும் கூட அது பற்றி எவரும் கதைக்க மாட்டார்கள்.
ராஜா கொல்லுரே உட்பட சகல ஆளுநர்களும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டாலும் அது பற்றி எவரும் கருத்து கேட்கமாட்டார்கள். சார்ள்ஸ் மற்றும் தியாகராஜாவின் நியமனங்கள் பற்றி விரிவாக நோக்கும் உலகமே மிகவும் அழகாக அமையும்.
Comments (0)
Facebook Comments (0)