சட்டத்தரணி ஹிஜாஸின் கைது; பொலிஸ் மா அதிபருக்கு சட்டத்தரணிகள் சங்கம் கடிதம்
பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸவினால் நேற்று (15) புதன்கிழமை திகதியிடப்பட்ட இந்த கடிதம் அனுப்பப்ட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கைதுக்கான காரணம் தெரிவிக்கப்படாமலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)