முபிசால் உள்ளிட்ட மூவர் தொல்பொருள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு நியமனம்
பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் முபிசால் அபூக்கர் உள்ளிட்ட மூவர், கிழக்கு மாகாணத்தினுள் தொல்பொருள் மரபுரிமைகளை முகாமை செய்வதற்கான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 16 பேரைக் கொண்ட இந்த செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த வருடம் நியமிக்கப்பட்டது.
இந்த செயலணியில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் புறக்கணிக்கப்பட்டதாக தொடர்ச்சியாக குரல்கொடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையிலேயே ஓய்வுபெற்ற சிவில் நிர்வாக அதிகாரியான ஏ. பத்திநாதன் மற்றும் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் முபிசால் அபூக்கர் ஆகியோர் சிறுபான்மை சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக நில அளவையாளர நாயகம் ஆரியரத்ன திசாநாயக்கவும் இந்த செயலணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவினால் இன்று (29) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)