சுங்காவிலில் இரத்ததான முகாம்

சுங்காவிலில் இரத்ததான முகாம்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் பூரண அணுசரனையில் பொலன்னறுவை மாவட்டத்தில் பல்வேறு சமூக  பணிகளை மேற்கொண்டு வரும்  அல் - ஹிக்மா சமூக அபிவிருத்தி மற்றும் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் ஒன்று சுங்காவில் முபீன் ஜும்மா மஸ்ஜித் மத்ரஸா மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

பொலன்னறுவை இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு, சமூக நலன் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள் ஆகியவற்றின் அங்கத்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக நலன் விரும்பிகள் என பலர் கலந்துகொண்டு இதில் இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

-எல்.எம்.சாஜித்-