ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலங்கை கண்டனம்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் பொதுமக்கள் தலத்தின் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் விளைவாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் இலங்கை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உலகளாவிய சமாதானம் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)