சவூதி தூதுவரின் ரமழான் வாழ்த்து
அருளும் கருணையும் மன்னிப்பும் நிறைந்த ரமழான் மாதத்தின் வருகையை முன்னிட்டு இலங்கை வாழ் முஸ்லிம்களக்கு தனது வாழ்த்துக்களை இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"இந்த புனித மாதத்தில், நற்செயல்கள் பரவிப் பெருகுகின்றன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இந்த மாதத்தில் இறைவனின் புனித அல்-குர்ஆன் இறக்கியருளப்பட்டதன் மாபெரும் மகிழ்ச்சி நினைவுகூரப்படுகிறது.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அதில் உள்ளது. ரமழானில் போட்டி போட்டுக் கொண்டு நற்செயல்கள் செய்யுமாறு ஆர்வமூட்டுகின்ற தலைசிறந்த போதனைகள் உள்ளன. இந்த ஆசீர்வதிக்கப்பட்ட மாதத்தில், அனைவருக்கும் இறைவனின் கருணையும் நிம்மதியும் பாதுகாப்பும் கிடைக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கிறேன்.
எதிர்வரும் காலங்களிலும் மீண்டும் மீண்டும் இந்த ரமழான் என்ற பாக்கியம் எம் அனைவருக்கும் கிட்ட வேண்டுமென்றும் அது சுமந்து வரும் நன்மைகளையும் அருள்களையும் அடைந்துகொள்ள வேண்டும் என்றும் இறைஞ்சுகிறேன்.
மேலும், இந்த ரமழானில் நோன்பு பிடித்து, நின்று வணங்கி, நல்லமல்கள் செய்யும் பாக்கியத்தை எம் அனைவருக்கும் தருமாறும் வேண்டுவதுடன் அதனை அல்லாஹ் அவற்றை ஏற்று அங்கீகரிக்க துஆச் செய்கின்றேன்" என்றார்.
Comments (0)
Facebook Comments (0)