வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடலட்டை கிராமங்களை உருவாக்கல்
இயற்கைக் கடல்சார் சூழலில் பிடிக்கப்படும் கடலட்டைகளின ஏற்றுமதியால் குறிப்பிடத்தக்களவு வெளிநாட்டு செலாவணியை ஈட்டிக்கொள்ள முடியும்.
அதற்கமைய, பெற்றுக்கொண்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு கடலட்டை இனப்பெருக்க நிலையத்தை நிறுவுதல், கடலட்டைப் பண்ணைகளை விரிவாக்கம் செய்தல், வணிக ரீதியான உயிரின வளர்ப்பு போன்ற கடலட்டை ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதன் மூலம் வெளிநாட்டு செலாவணி ஈட்டுவதை அதிகரித்தல் மற்றும் மீனவர் சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக ரீதியான கடலட்டை உயிரின வளர்ப்பு கருத்திட்டமொன்று இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் (NAQDA) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கருத்திட்டத்திற்காக யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் 5,000 ஏக்கர் காணிகளை அடையாளங் கண்டு, அவற்றில் 100 ஏக்கர்களுடன் கூடிய கடலட்டை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக் கிராமங்களை உருவாக்குவதற்கும் மற்றும் 100 ஏக்கர்காணியில் 01 ஏக்கர் வீதம் கடலட்டை உற்பத்திப் பண்ணைகளைத் தாபித்து குறித்த கருத்திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வதற்காகவும் கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Comments (0)
Facebook Comments (0)