பதில் ஜனாதிபதியாக சபாநாயகரை நியமிக்க தீர்மானம்
பதில் ஜனாதிபதியாக சபாநாயகரை நியமிக்க இன்று (09) மாலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரை பதவி விலகக் கோருவதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதனால் வெற்றிடமாகும் ஜனாதிபதி பதவிக்கு அரசியலமைப்பின் பிரகாரம் சபாநாயகரை பதில் ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இராஜினாமாச் செய்வதை ஏற்றுக்கொள்ளவில்லை. எவ்வாறாயினும் இருவரையும் இராஜினாமாச் செய்யக் கோரி சபாநாயகர் கடிதம் எழுத தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
நாட்டின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் விசேட கட்சித் தலைவர்கள் மாநாடு இன்று பி.ப 4.00 மணியளவில் சபாநாயகரின் வாசஸ்தளத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Comments (0)
Facebook Comments (0)