'உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிட வேண்டும்; நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்'

'உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிட வேண்டும்; நிரபராதிகள் விடுவிக்கப்பட வேண்டும்'

ஏ.ஆர்.ஏ.பரீல்

கடந்த 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் நடத்­தப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­த­லுடன் நேர­டி­யாக தொடர்­பு­டைய பயங்­க­ர­வா­திகள் என்று கூறப்­ப­டு­ப­வர்கள் நிச்­ச­ய­மாக தூக்­கி­லி­டப்­பட வேண்டும். அவர்­க­ளுக்கு மரண தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும் என அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

நாச­கார செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு சட்ட அடிப்­ப­டையில் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­ட­வர்கள் மாத்­தி­ரமே குற்­ற­வா­ளிகள். தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் தொடர்­பு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­வர்கள் குற்றம் நிரூ­பிக்­கப்­ப­டா­விட்டால் அவர்கள் விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்டும் அவர் தெரி­வித்­துள்ளார்.

கொள்­ளுப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சலில் அண்மையில் நடாத்­திய ஜும்ஆ பிர­சங்­கத்­திலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் தெரி­வித்­த­தா­வது,

"குற்­ற­வா­ளி­க­ளுக்கு கட்­டாயம் அதிக பட்ச தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும். அதில் மாற்­றுக்­க­ருத்து கிடை­யாது. ஆனால் தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் என்ற பெயரில் சந்­தே­கத்தின் பேரில் எவ­ரா­வது சிறை வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள் என்றால் சமூகம் இந்த நாடு இந்த நாட்டின் தலை­வர்கள் அனை­வரும் ஒன்று சேர்ந்து அதற்கு பரி­காரம் தேட வேண்டும். இது எமது கட­மை­களில் ஒன்று.

சில வேளை­களில் சிலர் தண்டப் பணம் கொடுத்துக் கொள்ள முடி­யாது சிறையில் இருக்­கி­றார்கள். அவர்கள் சிறிய தொகையே கொடுக்க வேண்டும். அவர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்டும். பள்­ளி­வா­சல்­கள் சம்­மே­ளனங்கள் இவ்­வா­றா­ன­வர்கள் தொடர்­பான புள்ளி விப­ரங்­களைத் திரட்டி அவ்­வா­றானவர்­க­ளுக்கு உதவி புரிய வேண்டும்.

மார்க்­கத்தின் பெயரால் எமக்குள் கொள்கை முரண்­பா­டுகள் இருக்க முடி­யாது. குரோதம், காட்­டிக்­கொ­டுப்பு போன்­றன எம்­மி­லி­ருந்தும் களை­யப்­ப­ட­வேண்டும். எமக்குள் ஒற்­றுமை தேவை. ஒற்­றுமை என்­பது உயி­ராகும். எமக்குள் விட்­டுக்­கொ­டுப்பு வேண்டும். நாட்டில் நாம் 20 இலட்சம் முஸ்­லிம்கள் இருக்­கிறோம். முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம், வக்பு சட்டம், மத்­ர­ஸாக்கள், மஸ்­ஜித்கள், பாட­சாலை விவ­கா­ரங்­களில் நாம் ஒற்­று­மைப்­ப­ட­வேண்டும்.

வித­வைகள், அநா­தைகள், குழந்­தைப்­பாக்­கியம் இல்­லா­த­வர்கள் மீது அன்பு செலுத்­த­வேண்டும். அவர்­க­ளுக்கு அதி­க­ம­திகம் ஸகாத், ஸதகா கொடுக்க வேண்டும். கொழும்பு பகு­தியில் செல்­வந்­தர்கள் வாழும் பகு­திக்கு பின்னால் வறு­மைக்­கோட்டில் மக்கள் வாழும் சேரிகள் காணப்­ப­டு­கின்­றன. ஸகாத், ஸதகா ஒழுங்கு முறையில் வழங்­கப்­ப­டா­மையே இதற்குக் காரணம்.

நாட்டில் பாவம் நடந்து கொண்டே இருக்­கி­றது. சிலர் வறு­மை கார­ண­மாக விபச்­சாரத் தொழி­லுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். நாம் பாவத்தில் ஈடுபடக் கூடியவர்கள். சமூகத்தில் ஏராளமான தவறுகள் நடக்கின்றன. சிலர் உலமாக்கள் கூறுவதைக் கேட்டு நடப்பதில்லை. நாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நாம் செய்யும் பாவங்களுக்காக தெளபா செய்ய வேண்டும்" என்றார்.

Vidivelli