மாலைதீவில் தேர்தல்கள்

மாலைதீவில் தேர்தல்கள்

ஆவின் அபேதீரா

அடுத்த சில வாரங்களில், மாலைதீவு தங்களின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலுக்குச் செல்லவுள்ளது.

அரசியல் சூழ்ச்சியும், தந்திரோபாய காய்நகர்த்தல்களும் அத்தகைய அமைதியான தேசத்தை பாதிக்காது என்று ஒருவர் கருதலாம், ஆனால் மாலைதீவு பொதுத் தேர்தல்களைச் சுற்றியுள்ள இராஜங்க விளையாட்டுகளில் ஒருவர் ஆழ்ந்துவிட்டால், அத்தகைய அனுமானங்கள் விரைவாக நீங்கிவிடும்.

2013 ஜனாதிபதி தேர்தலில், அப்துல்லா யாமீன் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிரிகளை சிறையில் அடைத்து நேரத்தை வீணடிக்கவில்லை.

தெற்காசியாவில் உள்ள மற்ற தலைவர்களைப் பிரதிபலிக்கும் வகையில், அவரது பதவிக்காலத்தின் வெளியுறவுக் கொள்கையானது இந்தியாவில் இருந்து சீனாவிற்கு தெளிவான மற்றும் உறுதியான மாற்றத்தால் குறிக்கப்பட்டது.

அவரது அரசாங்கம் நிலையான ஆட்சிக்கு தயாராக இருப்பதாகத் தோன்றியதை எதிர்ப்பாளர்கள் கவனித்துக் கொண்டனர். ஆயினும்கூட, அவரது ஆடம்பரமான சீன நிதியுதவி திட்டங்கள் இருந்தபோதிலும், யாமீனின் ஆட்சி ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக விமர்சிக்கப்பட்டது. அது உங்களுக்கு இன்னொரு தெற்காசிய அதிபரை நினைவூட்டினால், அது அவசியமானது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மாலைதீவு ஜனநாயகக் கட்சியின் (MDP) கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளரான இப்ராஹிம் சோலி 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் 16% வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது, பதவியில் இருக்கும் ஜனாதிபதி காணாத ஒரு திருப்பமாகும்.

வரலாறு போக்குகளைப் பின்பற்ற முனைகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, யாமீன் சிறையில் அடைக்கப்பட்டதுடன் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராக்கப்பட்டார். இருப்பினும், 2018 இல் யாமீனைப் போலவே, சோலியும் தனது தற்போதைய தேர்தல் தொடர்பாக நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கிறார்.

எட்டு வேட்பாளர்களுடன், மாலைதீவின் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் இதுவரை பங்கேற்கும் வேட்பாளர்களின் மிகப்பெரிய தொகுதி இதுவாகும். இருப்பினும், சில முக்கிய பெயர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் முன்னிலை வகிக்கின்றன.

இப்ராஹிம் சோலிஹ்

காகிதத்தில், ஜனாதிபதி சோலிஹ் தேர்தலுக்கு ஓர் வெற்றிகரமானவராக இருக்க வேண்டும்- அவரது பதவிக்காலம் பெரும்பாலும் சிக்கலற்றதாக இருந்ததுடன், அவரது மிகப்பெரிய சாதனை, கொவிட் பெருந்தொற்று மூலமாக ஓர் தேசிய வீழ்ச்சி ஏற்படும் அபாயமில்லாமல் தீவு நாட்டை வெற்றிகரமாக வழிநடத்தியமையாகும்.

மேலும், மாலைதீவு தங்களின் புதிய சீன நட்பு நாடுகளை அந்நியப்படுத்தாமல் இந்தியாவுடனான உறவை சரிசெய்வதற்கான வாய்ப்பை அவரது இராஜதந்திர நடவடிக்கைகள் அளித்துள்ளது.

இருப்பினும், அவரது தேர்தல் கண்ணோட்டமானது கோட்பாடு குறிப்பிடுவது போல தெளிவாக இருக்கவில்லை. அவரது சொந்த ஆளும் கூட்டணியின் இரண்டு கட்சிகள் தேர்தலில் தங்கள் வேட்பாளர்களை நிறுத்துகின்றன, அதாவது பதவியில் இருக்கும் சோலி தனது சொந்த அதிகாரத் தளத்திலிருந்து ஆதரவை இழப்பது கிட்டத்தட்ட உறுதியாகின்றது.

சோலிஹ் முன்னோடியாக இருக்கிறார், ஆனால் தேர்தல்கள் இரண்டாவது சுற்றுக்கு செல்லாமல் அவர் ஒரு முழுமையான வெற்றியைப் பெற முடியுமா என்பது நிச்சயமற்றதாகும். சோலிஹ் பெரும்பான்மையைப் பெறத் தவறினால், இரண்டாவது சுற்றில் ஒரே எதிரிக்கு எதிராக கணிசமான சவால்களைச் சந்திக்க நேரிடும்.

முகமது முய்ஸு

முகமது முய்ஸு இந்தக்கால இராஜங்க சூழ்ச்சியின் மற்றொரு வீரராவாரர். முன்னாள் ஜனாதிபதி யாமீனால் ஆமோதிக்கப்பட்ட முய்ஸு ஜனாதிபதி வேட்புமனுதாக்கலுக்கு ஒரு புதிய சவாலை முன்வைக்கிறார்.

முய்ஸு ஜனாதிபதி யாமீனின் ஆன்மீக வாரிசாவார். இருவரும் ஒரே கட்சியை சேர்ந்தவர்கள். இருப்பினும், யமீனினுடைய முய்ஸுற்கான ஆமோதிப்பு அதன் சொந்த சிக்கல்களால் நிறைந்துள்ளது. யாமீனின் பார்வைக்கு முரணான ஜனாதிபதி ஆட்சி முறையை பாராளுமன்ற முறைக்கு மாற்றுவது தொடர்பில் முய்ஸு முன்பு பேசியிருக்கிறார்.

மேலும், யாமீன் முடிந்தவரை குறைந்தளவான உண்மையான அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு வேட்பாளரை ஆதரிக்க விரும்புகிறார். துரதிர்ஷ்டவசமாக யாமீனைப் பொறுத்தவரை, முய்ஸு நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளில் ஒருவராவார்.

யாமீன் ஜனாதிபதியாக இருந்தபோது முன்னாள் வீடமைப்பு அமைச்சராக இருந்த முய்ஸு, நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் பதவிகளில் ஒன்றாக இருந்ததன் நன்மையைப் பெற்றுள்ளார். மாலைதீவு ஒரு சிறிய நாடு, மலிவு விலையில் வீடுகளுக்கான தேவை மகத்தானது. சவாலை எதிர்கொள்ளக்கூடிய ஒரு வீடமைப்பு அமைச்சருக்கு நிச்சயமாக ஒரு பெரிய வாக்காளர் தளம் இருக்கும்.

மேலதிகமாக, அவர் நாட்டின் தலைநகரான மாலேயின் மேயராக இருந்தார், அங்கு நாட்டின் கிட்டத்தட்ட 40% மக்கள் வசிக்கின்றனர். முய்ஸுவுக்கு அதிக எண்ணிக்கையிலான ஆதரவு உள்ளது, ஆனால் கோட்பாடு உங்களை இதுவரை மட்டும்தான் அழைத்துச் செல்ல முடியும், முய்ஸுவின் எண்கணித அனுகூலம் உணரக்கூடிய முடிவுகளாக மொழிபெயர்க்கப்படுமா என்பதை காலம் மட்டுமே சொல்லும்.

காசிம் இப்ராஹிம்

மாலைதீவின் செல்வந்த தொழிலதிபர்களில் ஒருவரான ஜம்ஹூரி கட்சியின் (JP) காசிம் இப்ராஹிம் மாலைதீவு அரசியலில் செல்வாக்கு செலுத்தும் திறன் மற்றும் இன்னும் குறிப்பாக, தேர்தல்களை திசைமாற்றும் திறன் காரணமாக எப்போதும் ஒரு தந்திரோபாயமாக செயற்படுபவராக காணப்படுகிறார்.

2008 மற்றும் 2013 தேர்தல்களில் போட்டியிட்ட இப்ராகிம் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். ஒரு தேர்தலில் வெல்வதற்கான எண்ணிக்கை அவரிடம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் அனைத்துக் கட்சிகளும் பொறாமைப்படுகின்ற வாக்கு வங்கி அவருக்கு உள்ளது.

மாலைதீவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றின் உரிமையாளரான, காசிம் தனது வாக்குகளை அதிகரிக்க தனது செறிவான பணியாளர்களை நம்பலாம் என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாகும்.

2008 இல் நடந்த முதலாவது பல கட்சி ஜனாதிபதித் தேர்தலில், அவர் முதல் சுற்றில் வெளியேற்றப்பட்டார், அதன்பின், MDP இன் முகமது நஷீத்துக்கு ஆதரவை அறிவித்தார்.

இறுதியில் அவர் நீண்ட கால சர்வாதிகாரியான மௌமூன் கயூமை இரண்டாவது சுற்றில் தோற்கடித்தார். அவர் ஆரம்பத்தில் நஷீத்தின் அமைச்சரவையில் சேர்ந்தபோது, காசிம் ஒரு வீழ்ச்சிக்குப் பிறகு விரைவில் வெளியேறினார்.

2013 தேர்தல்களில், முதல் சுற்றில் அவர் நீக்கப்பட்டதால், இரண்டாவது சுற்றில் நஷீத் மீது வெற்றியை உறுதி செய்த அப்துல்லா யாமீனை ஆதரிக்க வழிவகுத்தது. காசிம் 2018 தேர்தலில் ஒரு தண்டனையின் காரணமாக பங்கேற்கவில்லை, ஆனால் கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளராக எட் சோலிஹ்வை ஆதரித்தார்.

இங்கே ஒரு போக்கை காணலாம். இப்ராகிம் யாரை ஆதரித்தாலும் அவர் ஜனாதிபதி பதவியை வெல்வார். இந்த ஆண்டு, இரண்டாவது சுற்றில் எந்த வேட்பாளரை இப்ராஹிம் ஆதரிப்பார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்- மற்றைய வேட்பாளர்களும் கூர்ந்து கவனிக்கின்ற விடயமாகும்.  

சர்வதேச அரசியல் அடிப்படையில் இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் என்ன என்று ஒருவர் கேட்பதில் நியாயம் இருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, மாலைதீவு ஒரு சிறிய தீவு நாடு, உலக அரங்கில் அதன் அரசியல் முக்கியத்துவத்திற்காக அல்லாமல் அதன் அழகிய கடற்கரைகளுக்காக மிகவும் பிரபலமானது. இதற்கான பதில் இங்கே உள்ளது.

மாலைதீவுகள் இந்து-பசிபிக் சமுத்திரப் பகுதியில் தந்திரோபாயமாக விளையாடும் ஆடம்பரத்தை அனுபவிக்கும் அரசாகும். பொருளாதார மற்றும் அரசியல் அதிகாரத்தின் அடிப்படையில் பெருகிய முறையில் முக்கியத்துவம் பெற்று வரும் பிராந்தியத்தில், குவாட் கூட்டணி போன்ற பலதரப்பு சக்திகளும், இந்தியா, சீனா போன்ற தனிப்பட்ட நாடுகளும், அமெரிக்காவும் கூட, மாலைதீவுகள் எந்தப் பக்கத்திற்கு ஆதரவை எடுக்கும் என்று மூச்சுத் திணறிப் பார்க்கும். சுருக்கமாகச் சொன்னால், தாயக்கட்டை எந்தப் பக்கம் விழும் என்பதை வரவிருக்கும் தேர்தல்கள் நன்கு உணர்த்தலாம்.

ஆவின் அபேதீர சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க மையத்தின் (BCIS) மாணவராவார். அவர் உலகம் தொடர்பிலும் அது எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி அறிந்துகொள்வதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவராவார்.

அவரது விருப்பங்களில் புவிசார் அரசியல், பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையில் இருந்து கலாச்சாரம் மற்றும் விளையாட்டு வரை காணப்படுகின்றன.