இஸ்ரேலிய உளவுத் துறையை ஹமாஸ் எப்படித் தாக்கியது

இஸ்ரேலிய உளவுத் துறையை ஹமாஸ் எப்படித் தாக்கியது

ரதீந்திர குருவிட்ட

ஒக்டோபர் 7ம் திகதியன்று, ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக குறைந்தது 3,000 ஏவுகணைகளை ஏவியது. இதனைத் தொடர்ந்து நிலம் மற்றும் வான் வழியான ஆக்கிரமிப்பு நடைபெற்றது.

போராளிகள் காசா - இஸ்ரேல் தடையை உடைத்து, காசா எல்லை வழியாக வலுக்கட்டாயமாக நுழைந்து, இஸ்ரேலிய சமூகங்கள் மற்றும் இராணுவ நிலைகளுக்குள் நுழைந்து தாக்கியதுடன், இந்த செயற்பாட்டில் குறைந்தது ஆயிரம் இஸ்ரேலியர்களைக் கொன்றனர்.

இஸ்ரேல் படைகளுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் (IDF) மற்றும் மொசாட் அளவிற்கு விட வேறு எந்த நிறுவனமும் நற்பெயரை இழக்கவில்லை.

பல தசாப்தங்களாக, இந்த இரண்டு நிறுவனங்களும் வினைத்திறனுக்கான நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளதுடன், அவர்களின் செயற்பாடுகள் புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து போற்றப்படுகின்றன.

இது மக்கள் நாற்பரிமாண சதுரங்க ஆட்டத்தில் ஒரு பகுதியாக மொசாட் தாக்குதல் நடத்த அனுமதித்ததாக இன்னமும் வாதிடுவதை விளக்குகிறது.

ஹமாஸ் தாக்குதலின் வெற்றி, அத்துடன் அக்டோபர் 7 இல் அவர்கள் கைப்பற்றிய அனைத்து பகுதிகளிலிருந்தும் ஹமாஸை வெளியேற்றுவதற்கான IDF இனுடைய இயலாமை ஆகியன இஸ்ரேலுடன் போராட வேண்டிய ஒரே தீவிரமான போராளிக் குழு ஹெஸ்பொல்லா மட்டுமல்ல என்பதற்கான அறிகுறியாகும்.

சமீபத்திய மோதலில் உயிரிழந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கையை, மொத்த குடித்தொகையின் விகிதாச்சாரமாக எடுத்துக் கொண்டால், 9/11 அன்று ஏற்பட்ட அமெரிக்க உயிரிழப்புகளை விட அதிகமாக உள்ளது.

2000 மற்றும் 2005 க்கு இடையில் 1,000 க்கும் மேற்பட்ட இறப்புகளுடன், அதாவது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, பலஸ்தீனத்தின் இரண்டாவது எழுச்சியின் போது அதிகமான இஸ்ரேலியர்கள் இறந்தனர், தற்போதைய எண்ணிக்கை வெறும் 24 மணிநேர சண்டையிலிருந்து ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாறாக, 1967 இல் எகிப்து, ஜோர்டான் மற்றும் சிரியாவுக்கு எதிரான போரின் போது,  முக்கியமாக ராணுவ வீரர்களிடையே இஸ்ரேல் 700 பேரின் இறப்பை மட்டுமே எதிர்கொண்டது.

தற்போதைய இஸ்ரேலின் பதிலளிப்பு ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்களின் இறப்புகளை விளைவித்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, காஸாவில் இஸ்ரேலிய நடவடிக்கைகள் வரும் நாட்களில் தொடரும் என்பதால், எண்ணிக்கை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஸா கடுமையாக கண்காணிக்கப்படும் ஓர் பகுதியாகும். பலஸ்தீனியர்களை கண்காணிக்க இஸ்ரேல் சமீபத்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

காசாவிற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் இடங்கள் உள்ளன. ஒரேயொரு பாதுகாப்பான அணுகல் இடம் எகிப்திய எல்லையில் உள்ளதுடன் எகிப்திய அரசாங்கம் ஹமாஸின் நண்பனல்ல.

ஆகவே, ராக்கெட்டுகளை உருவாக்க தேவையான அனைத்து பொருட்களையும் ஹமாஸ் எவ்வாறு கடத்தியது மற்றும் அவர்கள் இஸ்ரேலிய கண்காணிப்பின் கூர்மையான பார்வையின் கீழ் கிளைடர் வானூர்திகளை இயக்குவதற்கு எங்கே கற்றுக்கொண்டார்கள்?

தாக்குதல் தயார் நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ஹமாஸ் உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கலாம். இது பலருக்கு தகவலுக்கான அணுகல் உள்ளதுடன் அனைவரும் நம்பியதற்கு மாறாக, மொசாட் இதைப் பற்றி பேசவில்லை என்பது, காசாவில் அவர்களின் மனித உளவுத்துறை பலவீனமடைந்துள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.

கடந்த தசாப்தங்களில் இஸ்ரேல் அதிகரித்த முறையில் சமிஞ்சை மூலமான உளவுத் தகவலை நம்பியுள்ளது. ஓய்வுபெற்ற இஸ்ரேலிய ஜெனரலான அமீர் அவிவி,  அசோசியேட் பிரஸிடம் (AP) கூறியது போல், ஹமாஸ் கற்காலத்திற்குச் செல்வதன் மூலமாக இஸ்ரேலிய தொழில்நுட்ப மேன்மைக்கன ஓர் மாற்றுவழியைக் கண்டுபிடித்தது,

அதாவது அது தொலைபேசிகள் அல்லது கணினிகளைப் பயன்படுத்துவதில்லை. இது ஹமாஸ் மற்றும் பலஸ்தீனியர்களை இஸ்ரேல் குறைத்து மதிப்பிடும் நிகழ்வாகும். இஸ்ரேலிய குடியேற்றங்களின் அதிவேக விரிவாக்கம், பலஸ்தீனிய குடிமக்களுக்கு எதிரான குடியேற்றவாதிகளின் வன்முறை மற்றும் ஜெனின் மற்றும் அல்-அக்ஸா மசூதியில் மோதல்கள், கிட்டத்தட்ட 250 பலஸ்தீனியர்கள் மற்றும் 32 இஸ்ரேலியர்களைக் கொன்றமையால், கடந்த ஆண்டு பலஸ்தீனியர்களிடையே அமைதியின்மை அதிகரித்து வருகிறது.

இதற்கிணையாக, அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கான உந்துதல் காணப்பட்டது. ஏதோ பெரிய விடயம் இடம்பெறப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன.

நடைபெறவிருக்கும் தாக்குதல் குறித்து எகிப்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது, ஆனால் இந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது குழுவினர் அவர்கள் பலஸ்தீனியர்களுடன் சத்தமின்றி அடியெடுத்து வைப்பதை அறிந்திருந்தனர், ஆனால் ஹமாஸ் வான் பாதுகாப்பு முறையில் (Iron Dome) சில ராக்கெட்டுகளை ஏவியதை தவிர ஓர் தீவிரமான தாக்குதலை நடாத்தும் திறன் கொண்டவர்கள் அல்ல என்று அவர்கள் நம்பியமையால் அதனைப் பற்றி  கவலைப்படவில்லை.

எப்படிப் பார்த்தாலும், இது இஸ்ரேலில் மிகப்பெரும் பாதுகாப்புத் தோல்வியாக இருந்ததுடன், 2006ல் ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேல் நடாத்திய போரின் போது மிகவும் விவேகமான ஆய்வாளர்களால் கவனிக்க முடியாத இராணுவ மற்றும் உளவுத்துறை பலவீனங்கள் விருத்தியாகின என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.

நிராயுதபாணியான பலஸ்தீனியர்கள் மற்றும் பலவீனமான போராளிக் குழுக்களுக்கு எதிராக COIN இல் ஈடுபட்ட பல தசாப்தங்களில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் நலிவுற்று விட்டன.

மறுபுறம், பல தசாப்தங்களாக மனிதாபிமானமில்லாத சூழ்நிலையில் வாழ்ந்து வரும் பலஸ்தீனியர்கள் வலிமையானவர்களாக வளர்ச்சியடைந்துள்ளனர்.

இஸ்ரேல் நம்பமுடியாத அளவிற்கு சிறந்த விமானப் படையைக் கொண்டுள்ளது, அது எதிர்வரும் நாட்களில் பலஸ்தீனிய நிலைகளைத் தாக்கும். ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் இறக்க நேரிடும். அது மின்சாரம் மற்றும் தண்ணீரைத் துண்டித்து பலஸ்தீனியர்களின் வாழ்க்கையையும் மோசமானதாக்கும். இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுவார்கள்.

காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மிகவும் அவசியமான ஐக்கிய நாடுகளின் நிதியுதவியை நிறுத்தக்கூடிய சக்திவாய்ந்த நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு உள்ளது.

இஸ்ரேல் தனது வரலாற்றில் இது போன்ற ஒரு பெரிய நீண்ட கால பின்னடைவை சந்திக்கவில்லை என்பதால், பலஸ்தீனத்தை பாதிக்க செய்வதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் மேற்கொள்ளும்.

இதனை ஹமாஸ் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவ்வாறென்றால் அது ஏன் தாக்குதல் மேற்கொள்வதற்கு தீர்மானித்தது?

கடந்த பத்தாண்டுகளில் அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவை முறித்துக் கொண்டன. பலஸ்தீனியர்கள் ஈரான் மற்றும் சிரியாவைத் தவிர வேறு எவரிடமும் எவ்விதமான வெளிப்படையான உதவியையும் பெறவில்லை என்றாலும், மற்றைய அரேபிய அரசுகளின் ஒற்றுமை பலஸ்தீனியர்களின் துன்பங்களை அரபு உலகம் அங்கீகரிப்பதற்கான வலுவான அடையாளமாக இருந்தன.

இருப்பினும், சமீப காலங்களில், சவூதி அரேபியா போன்ற சில அரபு நாடுகள் இஸ்ரேலுடனான உறவுகளை சுமூகமாக்கியுள்ளதுடன், இந்த நகர்வுகள் பலஸ்தீனியர்களை தவிர்த்து விட்டது.

சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனான சந்திப்பின் போது, பெஞ்சமின் நெதன்யாகு "இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியா இடையே ஒரு வரலாற்று சமாதானம்" அடையப்படும் என்று கூறினார்.

அது இடம்பெற்றால் பலஸ்தீனியர்களின் ஆட்டம் முடிந்துவிட்டதாக ஹமாஸ் ஒருவேளை உணர்ந்திருக்கலாம். தற்போதைய வன்முறையைக் கருத்தில் கொண்டு, சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சுமூகமானநிலை பின்னடைவைச் சந்தித்ததாகத் தெரிகிறது.

அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தந்திரோபாயமும் நல்லிணக்கமும் திசை மாறினால், பலஸ்தீனியர்களின் குறுகிய கால துன்பம் பெறுமதி மிக்கது என்று ஹமாஸ் நினைக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கிளர்ச்சியை முன்னெடுப்பது உளப்பலவீனத்தால் அல்ல.

ரதீந்திர குருவிட்ட இலங்கையின் கொழும்பைச் சேர்ந்த ஒரு ஊடகவியலாளரும் ஆராய்ச்சியாளருமாவார். சிங்கப்பூர் NTU வில் உள்ள எஸ். ராஜரத்தினம் சர்வதேச கற்கைகள் பாடசாலையில் மூலோபாய கற்கைகளில் முதுமாணி பட்டம் பெற்றவர்.

அவர் அமெரிக்காவிலுள்ள டேனியல் கே. இன்யூயே ஆசியா-பசிபிக் பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தில் ஒரு ஊழியராகவும், அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தால் நடாத்தப்படும் சர்வதேச பார்வையாளர் தலைமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தில் (IVLP) பங்கேற்பாளராகவும் இருந்தார்.

பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் குறித்து பல வெளியீடுகளுக்கு ஆக்கங்களை எழுதியுள்ள அவர் இலங்கை-சீன உறவுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.