நிதியியல் உளவறிதல் பிரிவு - அரச சார்பற்ற நிறுவன செயலகம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

நிதியியல் உளவறிதல் பிரிவு - அரச சார்பற்ற நிறுவன செயலகம் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

இலங்கை நிதியியல் உளவறிதல் பிரிவிற்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

பணம் தூயதாக்குதல், பயங்கரவாத நிதியிடல் மற்றும் இணைந்த குற்றங்கள் மற்றும் அதனுடன் இணைந்த எவரேனும் ஆட்கள் பற்றி விசாரணைகள் மற்றும் வழக்குத் தொடுத்தல்கள் மீது தகவல்களைப் பரிமாற்றும் நோக்கிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தமானது, 2006ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் ஏற்பாடுகளின் நியதிகளின் பிரகாரம் நிதியியல் உளவறிதல் பிரிவினால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகமும் பதிவாளருமான சஞ்சீவ விமலகுணரத்ன மற்றும் நிதியியல் உளவறிதல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி சுபாணி கீர்த்திரட்ண ஆகியோர் தொடர்புடைய நிறுவனங்கள் சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினைக் கைச்சாத்திட்டனர்.

பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாத நிதியிடலை ஒழித்தல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவின் பிரசன்னத்துடன் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

பணம் தூயதாக்குதல்/பயங்கரவாத நிதியிடல் அத்துடன் தொடர்புபட்ட குற்றங்களுக்கு அரச சார்பற்ற அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும் என்பதுடன் இதனூடாக தேசிய மற்றும் உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் முறைமைகளின் உறுதிப்பாட்டை அச்சுறுத்தக்கூடும்.

அரச சார்பற்ற அமைப்புக்களைப் பதிவுசெய்தல், அவற்றின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், வசதிகளை வழங்குதல், ஏதேனும் துர்நடத்தை போன்றவற்றிற்கெதிராக நடவடிக்கை எடுத்தல் போன்றவற்றிற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம் பொறுப்பாகவிருக்கின்றது.

தேசிய செயலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கையிலிருந்து தோன்றுகின்ற அல்லது அத்தகைய நடவடிக்கையுடன் தொடர்புபட்ட எவரேனுமாள் மீதான ஏதேனும் நிகழ்வு, விசாரணை அல்லது வழக்குத் தொடுத்தல் தொடர்பில் நிதியியல் உளவறிதல் பிரிவுடன் தகவல்களைப் பரிமாற்றுவதற்கு அரச சார்பற்ற அமைப்புக்களுக்கான செயலகத்திற்கு இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வசதியளிக்கும்.

பணம் தூயதாக்குதல்/பயங்கரவாத நிதியிடல் அத்துடன் தொடர்புபட்ட குற்றங்களைத் தடுத்தல், கண்டுபிடித்தல் மற்றும் வழக்குத் தொடுத்தல் என்பவற்றில் இது முக்கிய நோக்கொன்றாக அமைந்திருக்கும்.

நாட்டின் பணம் தூயதாக்குதலுக்கெதிரானஃபயங்கரவாதி நிதியிடலை ஒழித்தல் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கு தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதன் மூலம் இலங்கைச் சுங்கம், இலங்கைப் பொலிஸ், குடிவரவு மற்றும் குடியல்வுத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், ஆட்களைப் பதிவுசெய்வதற்கான திணைக்களம், இலங்கை மதுவரித் திணைக்களம், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு, பதிவாளர் நாயகத்தின் திணைக்களம் போன்ற 16 உள்நாட்டு அரசாங்க முகவராண்மைகளுடன் நிதியியல் உளவறிதல் பிரிவு - புரிந்துணர்வு ஒப்பந்தங்களை சைச்சாத்திட்டுள்ளது.

இது போன்று வெளிநாட்டு இணைத் தரப்பினர்களுடனும் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிதியியல் உளவறிதல் பிரிவு கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.