காத்தன்குடி மீடியா போரத்தின் செயற்பாடுளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

காத்தன்குடி மீடியா போரத்தின் செயற்பாடுளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

காத்தன்குடி மீடியா போரத்தின் செயற்பாடுளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.நூர்தீன் மற்றும் செயலாளர் எம்.ரி.எம்.யூனுஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடியை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களின் நலன்கள் தொடர்பில் கரிசiயுடன் செயற்படுகின்ற அமைப்பாகும்.

கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களின் முன்னேற்றம், வாண்மை அபிவிருத்தியில் மட்டுமல்லது அவர்கள் அனர்த்தங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கும் போதெல்லாம் எல்லைகள் தாண்டி உதவிக்கரம் நீட்டுகின்ற அமைப்பாகவும் செயற்பட்டு வந்திருக்கின்றது.

ஊடகத்துறை சார்ந்த அமைப்புக்களுடனும் ஊடகப் புலமையாளர்களுடனும் நெருங்கிய தொடர்பினைப் பேணிவரும் காத்தான்குடி மீடியா போரம் அவசியம் ஏற்படும் போதெல்லாம் அவர்களது ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்று செயற்பட்டு வருகின்றது.

தற்போதைய சூழலில் நாம் தேர்தல் ஒன்றினை எதிர்நோக்கியிருக்கின்றோம். தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதென்பது ஒவ்வொருவரதும் அரசியல் உரிமையாகும். அந்த உரிமையினை பயன்படுத்துவதற்கு தடையினை ஏற்படுத்துவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

ஊடகவியலாளர்கள் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் என்ற ஊடக தர்மம் மீறப்படக்கூடாது என்பதில் காத்தான்குடி மீடியா போரம் எப்போதும் மிகுந்த பற்றுறுதி கொண்டுள்ளது என்பதை இவ்வேளையில் வலியுறுத்த வரும்புகின்றோம்.

போரத்தின் சில அங்கத்தவர்கள் குறித்த சில அரசியல் கட்சிகளுக்கு அல்லது வேட்பாளர்களுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவது எம்மால் அவதானிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படும் ஊடகவியலாளர்களினால் வெளியிடப்படும் கருத்துக்களுக்கும் ஆதரவுச் செயற்பாடுகளுக்கும் காத்தன்குடி மீடியா போரம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது என்பதையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

மேலும்இ எதிர்வரும் பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவடையும் வரை காத்தன்குடி மீடியா போரத்தின் செயற்பாடுளை இடைநிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதையும்இ இதன் மூலம் ஏற்படும் அசௌகரிங்களுக்கு மனம் வருந்துகின்றோம் என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

.