சித்திரவதைக்கு 7 வருடங்கள் வரையான சிறையும், 200,00 வரையான அபராதமும்

 சித்திரவதைக்கு 7 வருடங்கள் வரையான சிறையும், 200,00 வரையான அபராதமும்

சித்திரவதை செய்தார் அல்லது சித்திரவதை செய்ய முயற்சித்தார் எனக் கண்டறியப்பட்டால் 50,000 ரூபா முதல் 200,000 வரை தண்டப் பணம் செலுத்துவதுடன் ஏற்கனவே அமுலில் உள்ள ஐந்து தொடக்கம் ஏழு வருடங்கள் வரையான சிறைத் தண்டனையினையும் அனுபிக்க வேண்டும்.

தற்போதைய சட்டத்தின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்குள்ளான நபருக்கு 10,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை தண்டப் பணம் விதிக்கப்படுகின்றது.

எனினும் சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் எனபவற்றுக்கெதிரான சமவாயச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த திருத்தத்தின் ஊடாக தண்டப் பணம் அதிகரிக்கப்படுவதுடன், சிறைத் தண்டனையும் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சட்டத்தின் இரண்டாம் பிரிவில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட மூலம் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் சித்திரவதை செய்வது பிணை வழங்க முடியாத குற்றமாகும். இந்த குற்றத்தினை விசாரிப்பதற்கான சட்ட அதிகாரம் மேல் நீதிமன்றத்திற்கு மாத்திரமே காணப்படுகின்றது.