பொலிஸ்மா அதிபரை விசாரணைக் குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிப்பு
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி ‘பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு’ முன்னிலையில் ஆஜராகுமாறு குறித்த குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக் குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இது வரை பல நாட்கள் கூடியிருந்ததுடன், எதிர்கால விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கில் தேசபந்து தென்னக்கோன் அவர்களை குழு முன்னிலையில் ஆஜராகுமாறு முதல் தடவையாக அறிவித்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)