சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை மாணவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை மாணவர்கள்  நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

எம்.எம்.ஜெஸ்மின்

கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாக நாடு திரும்ப முடியாது சவூதி அரேபியாவில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கை சவூதி அராபியாவில் உயர் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களினால் கூட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. 

சுமார் 140ற்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் சவூதி அரேபியாவிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலினை அடுத்து தற்போது அங்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், எமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விமான நிலயங்கள் மூடப்பட்டுள்ளமையினால் நாடு திரும்ப முடியாத நிலையில் சவூதியில் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகத்தோடு கடந்த மூன்று மாத காலங்களாக பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை எந்தவொரு சாதகமான முடிவும் எட்டாவில்லை.

இதனால் ஜனாதிபதி கோடாபாய ராஜபக்க்ஷவின் கவனத்திற்கு கொண்டு செல்லும நோக்கிலேயே ஊடகங்கள் வாயிலான இந்த கோரிக்கையினை சவூதி அராபியாவில் உயர் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜனாதிபதி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் பல சிரமங்களுக்கு மத்தியில் நாடு திரும்ப எதிர்பார்த்திருக்கும் எங்களையும் உடன் நாட்டுக்கு அழைத்துவர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறும் சவூதி அராபியாவில் உயர் கல்வி பயிலும் இலங்கை மாணவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.