அசாத் சாலியும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினை அசாத் சாலி இன்று (29) திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்து உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சாகல ரத்நாயக்க மற்றும் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)