கொவிட் - 19 ஜனாஸாக்களை தகனம் செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தம்
கொவிட் - 19 இனால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்யும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
கொழும்பு மாநகர சபையின் அறிவுறுத்தலுக்கமையவே இந்த தற்காலிக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
"கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்த ஒன்பது சடலங்கள் தற்போது சவச்சாலையில் காணப்படுகின்றன. இதில் அதிகமானது முஸ்லிம்களுடையதாகும்" என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் எம். பாலசூரிய தெரிவித்தார்.
"இந்த விடயம் தொடர்பில் விரைவில் தீர்வொன்றினை வழங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் வழங்கப்பட்ட உறுதிமொழியினை அடுத்தே தகனம் செய்வதை தற்காலிகமா இடைநிறுத்த கொழும்பு மாநகர சபை அறிவுறுத்தியது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.
Colombo Gazette
Comments (0)
Facebook Comments (0)