ஜப்பானிடமிருந்து இரண்டாம் தொகுதி 727,380 அஸ்ட்ராசெனெக்கா வக்சீன்கள் இலங்கை வருகை

ஜப்பானிடமிருந்து இரண்டாம் தொகுதி 727,380 அஸ்ட்ராசெனெக்கா வக்சீன்கள் இலங்கை வருகை

ஜப்பானில் தயாரிக்கப்பட்ட 727,380 அஸ்ட்ராசெனெக்கா வக்சீன்கள் தொகுதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று (07) சனிக்கிழமை வந்தடைந்துள்ளன.

இத்துடன், ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு மொத்தமாக 1,455,840 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கல் திட்டத்தை ஜப்பானிய அரசாங்கம் பெருமளவில் வரவேற்றுள்ளதுடன், ஜுலை 31 ஆம் திகதி கிடைத்திருந்த முதல் தொகுதி 728,460 தடுப்பூசிகளை முறையாக செலுத்தி  வருவதுடன், நீண்ட காலமாக இரண்டாவது ஊசிக்காக காத்திருப்போருக்காக வழங்கப்படுவதையும் வரவேற்பதாக அமைந்துள்ளது.

இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள இரண்டாம் தொகுதி தடுப்பூசிகளினூடாக, நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வழங்கும் திட்டத்துக்கு மேலும் வலுச் சேர்க்கப்படும் என்பதில் ஜப்பான் நம்பிக்கை கொண்டுள்ளது.

COVAX வசதியினூடாக இந்த விநியோகத்தை மேற்கொள்ள உதவியாக அமைந்த உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் யுனிசெப் அமைப்பு ஆகியவற்று ஜப்பான் நன்றி தெரிவிக்கின்றது.

இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக போராடும் நடவடிக்கைகளுக்கு ஜப்பானிய அரசாங்கம் அர்ப்பணிப்பை வழங்கும்.