நிலைபேறான நாளைக்காக காலநிலை குறித்த பரிந்து பேச இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் ஆக்டிவ் சிட்டிசன்

நிலைபேறான நாளைக்காக காலநிலை குறித்த பரிந்து பேச  இளைஞர்களைத் தயார்ப்படுத்தும் ஆக்டிவ் சிட்டிசன்

காலநிலை மாற்றம் தொடர்பான சமூக செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு முன்னெடுப்பாக பிரிடிஸ் கவுன்சில் தனது அக்டிவ் சிட்டிசன் நிகழ்ச்சித் திட்டத்தினை இவ் வருடத்தின் தொடக்கத்தில் முஸ்லிம் எய்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் இணைந்து ஆரம்பித்தது.

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதுடன், சுற்றுச் சூழல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதை நோக்கி அர்ப்பணிப்புடன்  சிவில் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய இளம் தலைவர்களின் ஆற்றலை மேம்படுத்துவதன் ஊடாக சமூக ஒத்திசைவு மற்றும் அபிவிருத்தி என்பவற்றை அடைந்து கொள்வது இந் நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.

இளம் அக்டிவ் சிட்டிசன் உறுப்பினர்களால் கொழும்பில் ஆறு புதிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பல்வேறு வகையான விதைகள், உரங்கள் மற்றும் வளரக்கூடிய கூறுகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டு விதைப் பந்துகளை பரப்பி நகர மற்றும் துணை நகர காடுகளை அதிகரிக்கும் நோக்கில் ஜப்பானின் புகழ்பெற்ற சூழலியலாளரான மஸாநோபுஃபுகுவோகா அவர்களின் 'வளர்வதற்காக வீசு: காலநிலை நடவடிக்கைக்காக விதைப் பந்துகள்' என்ற கொள்கை தழுவிக்கொள்ளப்பட்டது.

இலங்கையின் வனப்பகுதி அருகி வருவது உலக வெப்பமயமாகலினால் மோசமடைந்திருப்பதால் இதனை நிவர்த்தி செய்யும் வகையில் நீர்கொழும்பு களப்பிலிருந்து களனி கங்கை முகத்துவாரம் வரையான பகுதியில் மனித வசிப்பிடம் அற்ற நிலப்பகுதிகளில் இளம் தன்னார்வத்தொண்டாளர்கள் 5,000 விதை பந்துகளை சிதறச் செய்தனர்.

பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைத்தல் மற்றும் கடல்வாழ் உயிரனங்களுக்கு இக் கழிவுகளால் ஏற்படும் எதிர்மறையான தாக்கம் தொடர்பில் சமூக ஊடகங்களின் ஊடாக விழிப்புணர்வூட்டுவதை நோக்காகக் கொண்டு 'குப்பைகளுக்கு எதிரான இளைஞர்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிளாஸ்டிக் குப்பைகளினால் கடல் மாசமடைந்திருக்கும் விடயத்தில் இலங்கை தற்பொழுது உலகில் நான்காவது இடத்தில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக மிகவும் துடிப்புள்ள இளம் தன்னார்வத் தொண்டர்களினால் கொழும்பு மாவட்டத்தில் உள்ள கரையோரங்கள் மற்றும் சதுப்புநிலங்கள் துப்பரவு செய்யப்பட்டன.

குப்பைகளுக்கு எதிரான இளைஞர் திட்டத்தைப் போன்று கடற்கரைகளை சுத்தப்படுத்துவதன் ஊடாக கழிவு முகாமைத்துவம், மீள்சுழற்சி மற்றும் கழிவு மேம்பாடு போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘Waste-Ed’ திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக கடற்கரை முகாமைத்துவத்தின் எதிர்கால முயற்சிகளுக்காக ஆக்டிவ் சிட்டிசன்ஸ் குப்பைத் தொட்டிகள் மற்றும் கருவிகளை நன்கொடையாக வழங்கியது.

அதிகமான வெப்பம் புவியை வெப்பமடையச் செய்வது மற்றும் அதனுடன் தொடர்புபட்ட காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் இதனைச் சீர்செய்யும் நோக்கில் மாலைதீவில் பின்பற்றப்படுவதைப் போன்று கெத்தாராம பிரதேசத்தில் வீட்டுக் கூரைகளுக்கு வெள்ளை நிற வர்ணம்பூசும் ‘Life 2.0’ முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக சனநெருக்கம் அதிகமான சமூகங்களுக்கிடையில் சமூக ஒத்திசைவு, காலநிலை குறித்த அறிவூட்டல் மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவரும் நோக்குடன் கழிவு முகாமைத்துவ மற்றும் வடிகான் சுத்தப்படுத்தும் நடைமுறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்த சமூக செயற்பாட்டுத் திட்டம் சமூகங்களை ஒருங்கிணைப்பதில் உறுதுணையாக இருந்ததுடன், மேலும் முக்கியமாக ஒருவருக்கு ஒருவர் ஆதரவளிப்பதாக இருந்தது.

இந்நிகழ்வுகளில் பங்கெடுத்த ஜனித் மஹேல இட்டப்பன அவர்கள் குறிப்பிடுகையில், "இந்த முயற்சியில் காலநிலை செயற்பாடு பிரதான நோக்கமாக இருந்தபோதும், பல்வேறு இன கலாசாரத்தைக் கொண்ட கெத்தாராமவாசிகளுக்கிடையில் ஒரு பிணைப்பு ஏற்பட்டதுடன், ஒரு குறிக்கோளை நோக்கி இணைந்து பணியாற்றவும் வழிவகுத்தது.

கிரிக்கட்டைப் போன்று, புவி வெப்பமடைதல் இலங்கையர்கள் அனைவரையும் எந்தவித வேறுபாடுகளும் இன்றி ஒரே குடும்பமாக இணைக்கும் என நாம் நம்புகின்றோம்" என்றார்.

Waste Patrol' திட்டமானது தற்பொழுது காணப்படும் கழிவு முகாமைத்துவ நெறிமுறைகளில் காணப்படும் இடைவெளிகளை அடையாளம் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை முன்மொழிவதை நோக்காகக் கொண்டுள்ளது.

இத்திட்டமானது ஒன்றிணைக்கப்பட்ட வெபினார்கள் ஊடாக ஒன்லைன் ஆய்வுகளைப் பயன்படுத்தி கலந்துரையாடல்களுக்கான தளத்தை ஏற்படுத்தியது. கழிவு முகாமைத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பான சுற்றுச்சுழலை பேணுவதற்கான ஒத்துழைப்புக் குறித்து பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் புரிதலை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு முதலாவது வெபினார் ஏற்பாடு செய்யப்பட்டது.

Waste Patrol' சமூகச் செயற்பாட்டு முயற்சியில் கலந்துகொண்ட பாஹிம் அஸ்லம் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கை மற்றும் இந்திய ரொட்டறிக் கழகத்துடன் இணைந்து நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படும் திட்டமே இதுவாகும். கழிவு அல்லது அதனை முகாமைத்துவம் செய்வது பிரதான சவால்களாக உள்ள கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் எவ்வாறு சிறந்த கழிவு முகாமைத்துவப் பொறிமுறையை ஊக்குவிப்பது என்பது தொடர்பில் நாம் தொடர்ச்சியான வெபினார்கள் மற்றும் கூட்டிணைந்த செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தோம்.  பங்கேற்பு குறிப்பிடத்தக்கதாக அமைந்ததுடன், பங்குபற்றியவர்கள் உத்வேத்துடன் கலந்துகொண்டமை உண்மையில் புத்துணர்ச்சியளிப்பதாக இருந்தது" என்றார்.

உள்ளூர் சமூகங்களினால் எதிர்கொள்ளப்படும் ஒரு முக்கிய சுற்றுச் சூழல் நகரப்புற நீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் 'டுகைந டிநடழற றுயவநச' ஆறாவது திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிலைபேறான அபிவிருத்தி இலக்கு 14 இனால் ஈர்க்கப்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் அதிகாரசபைகள் மற்றும் செல்வாக்குச் செலுத்தும் நபர்களுடன் இணைந்து சமூக ஊடகங்களின் ஊடாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

அறிவூட்டல், பயிற்சி மற்றும் பொதுப் பங்குபற்றல் ஊடாக காலநிலை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஆக்டிவ் சிட்டிசன்ஸ் திட்டம் வெற்றிகரமாக அமைந்தது.

தூய்மையான மற்றும் நிலைபேறான இலங்கையை மீள் வடிவமைக்க உதவுவதற்கு காலநிலை குறித்த பரிந்துபேசுதல்களுக்கு இளைஞர்களை தன்னார்வத் தொண்டார்களாகத் தயார்ப்படுத்துவதற்கு தலைமைத்துவப் பண்புகளை இத்திட்டம் வளர்த்துள்ளது.