வரி விலக்கு செயல்பாட்டின் கண்காணிப்பினை மேம்படுத்துமாறு TISL பரிந்துரை
பணத் தூய்தாக்கல் தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி தடுப்பு போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை திறம்பட பயன்படுத்துவதை உறுதி செய்தல்
சம்பந்தப்பட்ட உள்நாட்டு அதிகார சபைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை உறுதி செய்தல்
கறுப்புப் பண பரிமாற்றத்தை கண்காணிக்க பாதுகாப்பான சர்வதேச ஒத்துழைப்பை பெறல்
கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட புதிய நிதிச் சட்டம் குறித்து TISL தனது கவனத்தை செலுத்துகின்றது. இச்சட்டமானது தனிநபர்களின் வெளிப்படுத்தப்படாத வருமானம் மற்றும் சொத்துக்களுக்கு வரி விலக்கு வழங்குவதை நோக்காக கொண்டுள்ளது.
இத்தகைய முயற்சிகளை அவதானிக்க உரிய ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரசபைகள் மேலதிக நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் இச் சலுகையானது பணத் தூய்தாக்கல் நோக்கத்திற்காக தவறான முறையில் பயன்படுத்தப்படலாம் என்பதனை TISL நிறுவனம் அறிவுறுத்துகிறது.
2012 ஆம் ஆண்டு, நிதி நடவடிக்கை பணிக்குழுவானது (Financial Action Task Force(FATF) தன்னார்வ வரி இணக்க திட்டங்களின் போது பணத் தூய்தாக்கல் தடுப்பு (Anti Money Laundering (AML) மற்றும் பயங்கரவாத நிதி எதிர்ப்பு (Counter Terrorist Financing (CTF) ஆகியவற்றை நிர்வகிப்பதில் பின்வரும் மூன்று சிறந்த நடைமுறைகளை அடையாளம் கண்டுள்ளது.
ML / CTF போன்ற அபாயங்களை எதிர்கொள்வதற்கு குறித்த நடைமுறைகளூடாக இந்த சட்டத்தை செயற்படுத்த இணங்குவது மிக முக்கியம் என TISL கருதுகின்றது.
1. AML/CTF தடுப்பு நடவடிக்கைகளின் சிறந்த பயன்பாடு - இச் சட்டமானது ஓர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பங்குகளின் வெளிப்படுத்தப்படாத வரியின் மதிப்புக்கு சமமான தொகையினை முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை வழங்குதல், மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட கருவூல மசோதா, இலங்கையில் ஓர் நிறுவனத்தினால் வெளியிடப்படும் கடன் பத்திரங்கள் மற்றும் அசையும் அல்லது அசையா சொத்து, இலங்கை மத்திய வங்கி (CBSL), நிதி புலனாய்வுப் பிரிவு (FIU) மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் என்பன புதிய சட்டம் தொடர்பாக தற்போது நடைமுறையிலுள்ள AML/CTF சட்டங்கள் மற்றும் வழிகாட்டல்களை முறையாக அமுல்படுத்துவதனை உறுதிப்படுத்த வேண்டும்.
பயன்பெறு உரிமையாளர் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் தங்களது வாடிக்கையாளர் தேவைகளை அறிதல், சொத்துக்களின் ஆரம்ப மூலங்களை கேள்விக்குட்படுத்துதல் போன்றவை உள்ளடங்கலாக வரி விலக்கு வழங்கப்பட்டவர்களை இலகுவாக அடையாளம் காண்பதையும் எதிர்கால இதனை உறுதி செய்ய உரிய ஒழுங்கமைக்கப்பட்ட அதிகாரசபைகள் முறையான கண்காணிப்பில் இருப்பதையும் இது உறுதி செய்யும்.
வரி விலக்கு வழங்கப்பட்டவர்கள் இலகுவாக அடையாளம் காண்பதையும் எதிர்கால இணக்கத்தை உறுதி செய்வதற்காகவும் அதிகாரசபைகளின் நெருக்கமான கண்காணிப்பில் இருப்பதையும் இது உறுதி செய்யும்.
சரியான மூலத்தினுடாக பெறப்பட்ட தனிநபர்களின் பணம் எவ்வித தடையுமின்றி நாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதை உறுதி செய்யும் அதேவேளை சட்டவிரோத வழிமுறைகளினால் பெறப்பட்ட பணம் நாட்டுக்குள் நுழைவதை கடினமாக்கும் நடைமுறைகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
2. உள்நாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு - "உள்நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரசபைகளினால் ஒருங்கிணைக்க மற்றும் ஒத்துழைக்க முடியுமாயிருத்தல், மற்றும் பொருத்தமான, கண்டறியும் நோக்கில் தகவல்களை பரிமாறுதல், ML/CTF சார்ந்த துஷ்பிரயோகங்களை விசாரித்தல் மற்றும் வழக்கு தொடுத்தல் போன்றவற்றை CBSL மற்றும் FIU என்பன உறுதிப்படுத்தல்.
CBSL மற்றும் FIU என்பன இம்முதலீடுகளினுடாக ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்து குறித்து வங்கிகள் மற்றும் ஏனைய நிதி நிறுவனங்களிடம் விழிப்புணர்வை அதிகரித்தல். சட்டத்தின் கூறுகளில் உள்ள இரகசியத்தன்மை நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு இடையூறாக இல்லை என்பதை உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் உறுதி செய்ய முயற்சிக்க வேண்டும்.
3. சர்வதேச ஒத்துழைப்பு - சிறந்த சர்வதேச ஒத்துழைப்பை உறுதி செய்தல் மற்றும் கறுப்புப் பணத்தை நாட்டுக்கு கொண்டுவரும் சந்தேக நபர்களை முறையாக கண்காணிக்க அதிகாரசபைகளுக்கு அதிகாரமளித்தல். FATF பரிந்துரைகளை முறையாக செயற்படுத்தாத நாடுகளின் வருமானம் மற்றும் சொத்துக்களை ஆழமாக கண்காணித்தல்.
புதிய சட்டம் தொடர்பாக TISL இன் நிர்வாக பணிப்பாளர் நதிஷானி பெரேரா கருத்து தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நிதி நிலைமை மற்றும் அந்நிய செலாவணியின் அவசியம் பற்றி நாம் புரிந்துகொள்கிறோம்.
எவ்வாறாயினும், இத்தகைய பரந்த வரி விலக்கானது நாட்டுக்குள் கருப்புப் பணத்தை நுழைய அனுமதிக்கும் மற்றும் எமது நாடு இத்தகைய தவறான இலாபமீட்டல் செயற்பாடுகளுக்கு ஓர் புகலிடமாய் மாறும்.
நாட்டிற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவர்களினால் குறித்த வரி விலக்கு தவறாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்தல் மற்றும் இவ்வாறான துஷ்பிரயோகங்களைத் தவிர்ப்பதற்கு கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக மேலே குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்த TISL ஆனது அனைத்து சட்ட அமுலாக்க மற்றும் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைகளுக்கு அழைப்பு விடுக்கிறது.
Comments (0)
Facebook Comments (0)