சவூதி தூதுவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

சவூதி தூதுவரின் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

இந்த அருள் நிறைந்த ஈத் அல் பித்ர் திருநாளில், இலங்கை அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்த புனித நாளானது, நாம் அனைவருக்கும் புதிய ஆரம்பங்கள், உற்சாகம் மற்றும் அன்பை பரப்புவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்நாளில் உங்கள் எல்லோருடனும் என் மகிழ்ச்சியையும், அன்பையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எங்கள் அனைவருக்கும் எதிர்காலத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பெற்று, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகள் மேலும் வலுவடையட்டும் என இறைவனை பிரார்த்திக்கொள்கிறேன்.

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தி, அந்த ஒத்துழைப்பு இரு நாடுகளின் நன்மைக்கும் செழிப்புக்கும் வழிவகுப்பதாக அமையட்டும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்திக்கொள்கிறேன்.

ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்!

காலித் ஹமூத் அல்கஹ்தானி
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்