ஆரோக்கியமான வாக்களிப்பிற்காக நீங்கள் செய்யவேண்டியது என்ன?

ஆரோக்கியமான வாக்களிப்பிற்காக நீங்கள் செய்யவேண்டியது என்ன?

ஆரோக்கியமான வாக்களிப்பிற்காக நீங்கள் செய்யவேண்டியது என்ன?

01) முகக்கவசம் அணிந்து கொண்டு செல்லவும்.

02) நீலம் அல்லது கறுப்பு நிற பேனாவை எடுத்துச்செல்லவும்.

03) வாக்களிப்பு நிலையத்தில் சவர்க்காரமிட்டு கழுவி அல்லது சனிட்டைசர் பாவித்து கைகளை தொற்று நீக்கிக்கொள்ளவும்.

04) உங்களுக்கிடையில் சமூக இடைவெளியைப் பேணிக்கொள்ளவும்.

05) உங்களின் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் உயர்த்திக்காட்டவும்.

06) உங்களின் வாக்காளர் அட்டையை அதிகாரிகளிடம் காட்டிவிட்டு அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைப் பெட்டியினுள் போடவும்.

07) கைக்கு சனிட்டைசர் விசிறப்பட்ட பின் கைகளை திசுப்பேப்பரினால் துடைத்துவிட்டு அதனை குப்பைப் பெட்டியினுள் போடவும்.

08) உங்களின் சிறுவிரல் நகத்தில் மை பூசப்படும் போது மேசையில் திசுப்பேப்பர் வைக்கப்பட்டால் அதனை நீங்களே அகற்றி குப்பைப் பெட்டியினுள் போடவும்.

09) வாக்களிப்பதற்கு வாக்களிப்பு நிலையத்தில் பேனா தரப்பட்டால், வாக்களித்த பிறகு பேனாவை குப்பைப் பெட்டியினுள் போடவும்.

10) தனிமைப்படுத்தல் நிலையத்தில்14 நாட்களை முடித்துவிட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தலில் 14 நாட்கள் முடிக்காதவர்கள் தமது குடும்பத்தினருடன் பிற்பகல் 4 - 5 மணிக்கிடையில் வாக்களிக்கச் செல்லலாம்.

11) கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சையின் பின் விடுவிக்கப்பட்டு, வீடுகளில்14 நாட்கள் தனிமைப்படுத்தலை முடிக்காதவர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கு செல்ல முடியாது.

12) வீதிகளில் கூட்டம் கூட்டமாக நிற்பதைத் தவிர்க்கவும்.

வைத்தியர் நாகூர் ஆரிப்