'13ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க இந்தியா இடமளிக்கக்கூடாது'
பல ஒப்பந்தங்களை ஏமாற்றியது போல் சட்டப் படி, அரசமைப்பில் உள்வாங்கப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டத்தை இவ்வரசாங்கம் இல்லாதொழிக்க இந்தியா இடமளிக்கக் கூடாது என, இலங்கைக்கான இந்தியஉயர் ஸ்தானிகரிடம், தமிழ் முற்போக்குக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகள் கோபால் பால்கேயுக்கும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணிக்கும் இடையில் நேற்று (10) மாலை இடம்பெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
“அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தையும் 13ஆவது திருத்தத்தையும் ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் இல்லாமல் செய்யக் கங்கணங் கட்டிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே பல ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டி
ருக்கின்றன.
ஆனால், அரசமைப்பில் உத்தியோகபூர்வமான உள்வாங்கப்பட்ட 13ஆவது திருத்தத்தை அப்படி இலகுவில் இல்லாதொழிக்க முடியாது. 13 என்பது இந்தியாவின் குழந்தை. அந்தக் குழந்தையைப் பாதுகாப்பது இந்தியாவில் பாரிய பொறுப்பு” என, தமிழ் முற்போக்குக் கூட்டணி மேலும் வலியுறுத்தியுள்ளது.
கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் முற்போக்குக்
கூட்டணி சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன் தலைமையில் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், கூட்டணியின் செயலாளர் சாப்டர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
Comments (0)
Facebook Comments (0)