400 நாட்களின் பின்னர் குடும்பத்துடன் உரையாடினார் தடுப்புக் காவலிலுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ்
தடுப்புக் காவலில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக தனது குடும்பத்தினருடன் இன்று (27) வியாழக்கிழமை உரையாடினார்.
சுமார் 400 நாட்களின் பின்னர் வெலிக்கட சிறைச்சாலையிலிருந்தே அவர், குடும்பத்தினருடன் உரையாடியுள்ளார்.
The family got a rare opportunity to speak to Hejaaz face-to-face via a video link from Welikada Prison earlier today. Many of those present saw and spoke to him for the first time since he was arrested over 400 days ago. It was fantastic to see him smile. pic.twitter.com/cHLHfgbQ8f
— Justice For Hejaaz (@Justice4Hejaaz) May 27, 2021
ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் - 19 காரணமாக கைதிகளை அவர்களது உறவினர்கள் பார்வையிடுவது இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறைச்சாலைகள் திணைக்களம் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக கைதிகள் உறவினர்களுடன் கதைப்பதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
Comments (0)
Facebook Comments (0)