பொத்துவில் பதில் தவிசாளர் மீது தாக்குதல்
சம்சுல் ஹுதா
பொத்துவில் பிரதேச சபையின் பதில் தவிசாளரான பெருமாள் பார்த்தீபன் மீது இன்று (14) வியாழக்கிழமை இரவு இனந்தெரியாதோரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊரணி பிரதேசத்திலுள்ள பதில் தவிசாளருக்கு சொந்தமான சுறுல்லா விடுதியொன்றில் வைத்தே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான பார்த்தீபன், தற்போது பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையைத் தீர்ப்பதற்கு விசாரணையொன்றை ஆரம்பிப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யகம்பதினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை முடியும் வரை பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் பதவியிலிருந்து எம்.எஸ்.ஏ.வாசித் ஆளுநரினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பிரதேச சபையின் உப தவிசாளரான பெருமாள் பார்த்தீபன் பதில் தவிசாளராக கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இவர் தனது கடமைகளை நாளை பொறுப்பேற்க தீர்மானித்திருந்தார். இந்த நிலையிலேயே பதில் தவிசாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments (0)
Facebook Comments (0)