மனித உரிமை மீறல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினராக யோகேஸ்வரி நியமனம்
றிப்தி அலி
மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினராக முன்னாள் யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி கோட்hபய ராஜபகஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த விசாரணை ஆணைக்குழுவிற்கு தமிழ் பிரதிநிதியொருவரை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே, ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் மற்றும் இது போன்ற கடுமையான குற்றங்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களின் காண்புகள் குறித்து விசாரிக்கவும், அறிக்கை சமர்ப்பிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட விசாரணை ஆணைக்குழுவொன்று கடந்த ஜனவரி 21ஆம் திகதி நியமிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையிலான இந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ மற்றும் ஓய்வுபெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாற நிலையில், தமிழ் சமூகத்தினை சேர்ந்த முன்னாள் யாழ்ப்பாண மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். ஆறு மாத பதவிக் காலத்தினைக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)