அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் சந்திப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காருக்கும் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலய அரசியல் விவகார அதிகாரிக்கும் இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று (11) மாலை எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நாட்டின் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட இந்நிகழ்வில் அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியான ஜெப்ரி டி சானினுடன் தூதரக உள்ளக அரசியல் விவகார அதிகாரிகளான நஸ்ரின் மரிக்கார் மற்றும் சதுரி திஸாநாயக்க ஆகியோரும் பங்கேற்றனர்.
Comments (0)
Facebook Comments (0)