ஜமாதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் கைது
ஸ்ரீலங்கா ஜமாதே இஸ்லாமியின் முன்னாள் தலைவரான ஹஜ்ஜுல் அக்பர் நேற்று (12) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரான பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் வஹாபிஸத்தையும், ஜிஹாதையும் பரப்பினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
60 வயதான இவர், தெமடகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளளார்.
தடுப்பு காவலில் வைத்து இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா ஜமாதே இஸ்லாமியின் தலைவராக சுமார் 24 வருடங்கள் இவர் செயற்பட்டுள்ளார்.
ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி முன்னர் கைது செய்யப்பட்ட இவர், பின்னர் எந்தவித குற்றங்களும் இல்லாமையினால் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Comments (0)
Facebook Comments (0)