அமைச்சர் சரத் வீரசேகர - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக பொறுப்பதிகாரி சந்திப்பு
கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் பொறுப்பதிகாரி ஹுமைத் அல்தமீமி மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோருக்கிடையிலான ஒரு சந்திப்பு பத்தரமுல்லை 'சுஹுருபாய'வில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது, சர்வதேச அரங்கில் இருதரப்பு ஆதரவை விரிவுபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இக்கலந்துரையாடலில், பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் நாரத சமரசிங்க, அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர் மற்றும் அன்சார் மவ்லானா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Comments (0)
Facebook Comments (0)