சீனோபாமா தடுப்பூசி: TISL இன் RTI விண்ணப்பம் NMRAஇனால் நிராகரிப்பு

சீனோபாமா தடுப்பூசி: TISL இன் RTI  விண்ணப்பம் NMRAஇனால் நிராகரிப்பு

சீனாவின் Sinopharma  கொவிட் - 19 தடுப்பூசிகளுக்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துமாறு ட்ரான்ஸ்பெரன்ஷி இன்டெர்நெஷனல் (TISL) நிறுவனம் அனுப்பிய தகவலுக்கான விண்ணப்ப கோரிக்கையை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) நிராகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் சில பிரிவுகளின் கீழ் தகவல்களை வழங்க மறுப்பதாக NMRA தெரிவித்துள்ளது.

சீன கோவிட் 19 தடுப்பூசிகளைப் பயன்படுத்த NMRA எவ்வாறு அனுமதி  அளித்தது என்பது குறித்த தகவல்களைப் பெறுவதற்காக TISL நிறுவனம் மீண்டும் NMRA இடம்   மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.